PoornaChandra Jeeva : சிந்துவெளி நாகரிகப் புகார் நகரம்
காவிரிப்பூம்பட்டினக் கடலடி ஆய்வு.
பூம்புகார் கடலில் மூழ்கியது வரலாறு. கடந்த 1985-95 இல் திரு. S. R. இராவ் தலைமையில் கடலடித் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட. புகார் நகரம் கடலில் 5கி.மீ தொலைவில், 25 மீட்டர் ஆழம் வரை இருப்பது தெரிய வந்தது. 5-7 மீ ஆழத்தில் செதுக்கப்பட்ட கருங்கல் கட்டுமானங்களும், 14 மீ ஆழத்தில் கடலடிக் காடுகளும், திறந்த வெளிகளும் உள்ளன. அதற்கப்பால் 20--25மீ ஆழத்தில் பெரிய அளவில் கட்டட இடிபாடுகளும் உள்ளன.
இவற்றுள் 23 மீ ஆழத்தில், 5 கி. மீ தொலைவில் செம்புராங்கற்களால் கட்டப்பட்ட பெரிய கட்டடங்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடம் ஒன்று U வடிவில், வடக்கும் தெற்காக அமைந்துள்ளது. மொத்த நீளம் 140 மீ அளவும், ஒருபக்கம் மட்டும் 85மீ நீளம் உள்ளது. உயரம் 3 மீ ஆகும். இடிந்து வண்டலும், மணலாலும் மூடப்பட்டுள்ளது. இதன் வடக்கு திறந்த வெளியும், இரு புறமும் சிறு இடிபாடுகளும் உள்ளன. இது அக்கட்டடத்தின் வாயிற்புறமும், நுழைவாயில் சுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கோயில், அல்லது விகாரை என்று கூறியுள்ளார் இராவ்.
இக்கட்டடத்துக்கு 30 மீ தொலைவில் மிகப்பெரிய முட்டை வடிவ (ovel) கட்டடம் ஒன்று சேறும், மணலும் மூடி 2. 5 மீ உயரமே வெளியில் தெரிகிறது. இதன் அகலம் 18 முதல் 30 மீ வரை உள்ளது. ஆய்வாளர்களும், அப்பகுதி மீனவர்களும் ஒரு கோயில் என்று கூறியுள்ளனர்.
. நான் சிறுவனாக என் பாட்டி வீட்டுக்கு புகார் வானகிரி சென்றபோது ஒரு மீனவர் கூறியது நினைவில் வருகிறது. தூண்டில் மீன் எங்கோ சிக்கிக் கொண்டதால் அதை மீட்க ஆழத்துக்குச் செல்ல ஒரு பெரிய கட்டடத்தின் வாயில் வழியே உள்ளே இருட்டுப் பகுதிக்குச் சென்று தடவிப்பார்த்த போது சில சிலைகளை உணர்ந்ததாகவும், கோயில் என்று அச்சமடைந்தவர் ஒரு சிலையுடன் வந்துவிட்டதாகவும், அச்சிலை எங்கோ இருப்பதாகவும் கூறினார்.. என் பாட்டி தன் தந்தை புகார் கடலோரம் தங்கக் காசுடன் ஒரு செம்பை எடுத்ததாகவும் அதனால் தாங்கள் பணக்காரரானதாகவும், தன் திருமணம்வரை அச்சொம்பு பூசை அறையில் இருந்து என்றும் , தானே ஒரு யானை பதித்த தங்கக் காசு ஒன்றைத் தந்தையிடம் இருப்பதைப் பார்த்ததாகவும் என்னிடம் கூறியிருக்கிறார். புதையல் நிகழ்வு 1850 ஆண்டளவில் எனலாம். அவர்கள் வசதியானது இருக்கட்டும், வரலாறு நட்டப்பட்டுவிட்டதே .
கரையிலிருந்து 5--7 மீ அளவிலானபொருட்கள் கி. மு. 3--4 நூற்றாண்டு என்று கூறியுள்ளார் திரு. இராவ் . மேலும், 5 கி. மீ தொலைவில், 23 மீ ஆழத்திலுள்ளதும் சங்க காலத்திற்கு உரியதாகுமா? என்று நியாயமான வினா எழுப்புகிறார். 2000 ஆண்டுகளில் கடல்மட்டம் 25 மீ உயரமுடியுமா என்று கேட்கிறார். இதனை நாம் ஒரு சிறு கணக்கீட்டின் மூலம தீர்வு செய்யலாம். இந்தியாவில் கடல்மட்ட உயர்வை குஜராத்தின் கட்சு கடல்மட்டத்துடன் ஒப்பிட்டு இந்தியக் கடல் மட்டம் 10000 ஆண்டுகளில் 60 மீ உயர்ந்திருப்பதால் கோவா கடலாய்வு நிறுவன அறிவியலாளர்கள் ஹசிமி, நாயர் ஆகியோர் கூறியுள்ளார். இதன்படி ஆய்ந்து கடலடியில் மூழ்கி 20 மீ ஆழத்தில் உள்ள துவாரகை கி. மு. 1500 அளவில் மூழ்கியதாக கண்டுபிடித்துள்ளனர். இதன்படி நாம் சராசரியாகக் கணக்கிட்டு புகார் 5 கி. மீ அளவில், 23மீ ஆழத்தில் உள்ள சிதைந்த நகரம் கி. மு. 1841 அளவில் கடலில் மூழ்கியது என்று அறியலாம். இதனால் அங்கு காணப்படும் புகார் நகரம் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சிறப்புறறிருந்ததை அறிகிறோம் . இக்காலம் சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய காலமாகும். எனவே, அந்நாகரிகக் காலத்திலேயே தமிழகத்திலும் நனிநாகரிகம் ஒன்று சிறப்புற்றிருந்ததை இவ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனது காலக்கணிப்பாய்வை பூம்புகார் அருகில் செம்பியன் கண்டுயூரில் கிடைத்துள்ள சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் கிடைத்துள்ள - சிந்துவெளி நகரங்களிலும் கிடைத்துள்ள புதியகற்காலக் கல்லாயுதக் கற்கருவி மேலும் தெளிவாக உறுதி செய்கிறது. மேலும், சங்க காலத்தில் கடல் கரையில் உள்ள கண்ணகி சிலையிலிருந்து கடலில் 3 கி. மீ. தொலைவில் இருந்தென்ன உறுதிபடக் கூறலாம்.. இணைக்கப்பட்டுள்ள கணக்கீட்டுபட்டியையும், ஆழ்கடலாய்வில் திரு. S. R. இராவ் குழுவினர் எடுத்த படங்களையும் காண்க. 14மீ என்ற கணக்கீடு புகார் கடலில் மீட்கப்பட்ட பானையோடுகளின் கரிமக் காலப்பகுப்பாய்வு கி. மு. 4-3 நூற்றாண்டு என்ற காலத்தைக் காட்டுவதாக இராவ் கூறியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
ஆதிப் புகார் நகரம் கி. மு. 1841 இல் கட லில் மூழ்கியது , சங்க காலப் புகார் நகரம் கி. மு. 338 அளவில் கடல கொண்டது என்பது எனது கணக்கீட்டின்படியான முடிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக