வியாழன், 27 ஜனவரி, 2022

சுந்தர் பிச்சை மீது 'Ek Haseena Thi Ek Deewana Tha'. திரைப்பட இயக்குநர் வழக்குப் பதிவு! யூடிபில் சட்டவிரோத பதிவேற்றம்

 கலைஞர் செய்திகள் : கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மீது மும்பை போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன். இவர் 2017ம் ஆண்டு இயக்கி வெளியான படம் 'Ek Haseena Thi Ek Deewana Tha'. இதில் நடிகர்கள் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மர்ம நபர்கள் சட்ட விரோதமாக யூடிபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அதேபோல் இயக்குநர் சுனில் தர்சன் இப்படத்திற்கான காப்புரிமை இதுவரை யாருக்கும் கொடுக்கவில்லை.


இதனால் காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காப்புரிமை சட்ட விதிகளை மீறியதாகக் கூறி, சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மும்பை போலிஸார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து இயக்குநர் சுனில் கூறுகையில்,"எனது படத்திற்கான காப்புரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

நான் யூடியூபிற்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனது படத்தை யூடியூபில் பதிவேற்றி அதில் சம்பாதிக்கிறார்கள். எனவேதான் நான் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: