திங்கள், 24 ஜனவரி, 2022

2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு'.. நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சூளுரை

 Rayar A  -  tamil.oneindia.com  :  டெல்லி: 2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்று நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
தலைநகர் டெல்லியில் முப்பரிமாண ஒளி வடிவ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி தேசத்தின் விடுதலைக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
 முதன் முதலாக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நேதாஜியின் 'ஹாலோகிராம்' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..



நேதாஜியின் 'ஹாலோகிராம்' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. அது என்ன ஹாலோகிராம்? முழு விவரம் முப்பரிமாண மின் ஒளி சிலை முப்பரிமாண மின் ஒளி சிலை டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
 அதன்படி நேதாஜியின் பிறந்த நாளான இன்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் 'ஹாலோகிராம்' எனப்படும் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் வரை முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சிலை இந்தியா கேட்டில் மிளிரும். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, நேதாஜிக்கு புகழாரம் சூட்டினார். பல்வேறு சோதனைகளை சந்தித்த போதும் ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி என்று கூறிய பிரதமர் மோடி இந்தியர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை நேதாஜி என்று கூறினார்.

விரைவில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலைக்கு பதிலாக பிரமாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும் என்று கூறிய மோடி, நேதாஜியின் சிலை ஜனநாயக விழுமியங்களையும் எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும் என்று பெருமையுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், ' சுதந்திர இந்தியா கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள், இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை" என்று நேதாஜி கூறுவார்.

 சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள், அதாவது 2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்றும் கூறினார். ''நாட்டில் சீர்திருத்தம் மற்றும் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். NDRFஐ நவீனப்படுத்தி, நாடு முழுவதும் விரிவுபடுத்தினோம். திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பிற சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன' என்றும் பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை: