திங்கள், 24 ஜனவரி, 2022

ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் பயணிகளுக்கு தண்டம் அறவிடப்படும்! நிர்வாகத்தின் புதிய உத்தரவு

கலைஞர் செய்திகள் :  ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சத்தமாக பாட்டு கேட்டால் அபராதம்.. ரயில்வே நிர்வாகத்தின் புதிய உத்தரவால் பயணிகள் அதிர்ச்சி!
ரயில் பயணத்தின் போது சத்தமாகப் பேசினாலோ அல்லது பாட்டுக் கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இது குறித்து ஒன்றிய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில், "ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாகப் பேச மற்றும் செல்போனில் சத்தமா பாட்டுக் கேட்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விதியை மீறி செயல்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகப் புகார் அளித்தால் உடனே ரயில்வே போலிஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பயணிகளிடம் ரயில்வே ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதியவர்கள், ஊனமுற்றோர், பெண் பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: