செவ்வாய், 25 ஜனவரி, 2022

வேத நூல்களிலேயே பிராம்மணர்கள்,க்ஷத்ரியர்கள்,வைசியர்கள் ஏன் மேலானவர்கள், சூத்திரன் ஏன் அவர்களைவிட கீழானவன் என்பதற்கான விரிவான...

May be an image of text that says 'சூத்திரன் ஏன் அடிமையானான்?! பிரம்மன் காலிலிருந்து இருபத்தொரு முறை ஸ்தோமத்தை உணடாக்கினன்.பிறகு, 'அநுஷ்டுப், என்னுஞ் சந்தத்தையும், வைராஜம், என்னுஞ் சாமப் பாடலையும், பிறகு, மனிதர்களுக்குள் சூத்திரரையும், விலங்குகளுக்குள் குதிரையையும் படைத்தனன்.சூத்திரரும் சூத்திரரும் குதிரையும் ஒருவருக்கு உட்பட்டிருப்பவைகள். அதாவது, மூவருணத்தார்கட்குப் பணிவிடை செய்வதால் சூத்திரர்களும், தாங்கிச் செல்வதால் குதிரையும் உட்படுகின்றவைகள் என்பதாம். மற்றும், இங்கு மேற்கூறிய விடங்களிலிருந்து தேவதைகள் உண்டானது போல் பிரமனுடைய காலிலிருந்து ஒரு தேவதையும் உண்டாகாமையின் சூத்திரர்கட்கு யக்ளம் உரியதன்றாம். TSXC Irceso1e S அ்வேகும் லேுக் -யஜூர் வேதம்(கிருஷ்ண வேதம்( யஜூர்,7 வது காண்டம், காண்டம்,பிரபாடகம்1) பிரபாடகம்'

Dhinakaran Chelliah  : புருஷசூக்தம்  மனிதநேய விரும்பிகள் வாசிக்க வேண்டுகிறேன்
இந்தப் பதிவு அதிமுக்கியமான விழிப்புணர்வுப் பதிவு,தயவு செய்து மற்ற பதிவுகளைப் போன்று கடந்து செல்ல வேண்டாம்.
வேத காலத்தில் வர்ணாஸ்ரம பாகுபாடுகள் இல்லையென்பதும் ஹிந்த்துவவாதிகள் முன்னெடுத்துவரும் முக்கியமான பொய்ப்பிரச்சாரம்.வேத நூல்களில் புருஷ சூக்தம் பகுதி தவிர வேறெங்கும் வர்ணாஸ்ரம குறிப்புகள் இல்லையென்பதும் வேதாந்திகளின் தொடர் வாதம்.
//புருஷனின்(இறைவன்) கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை//
இப்படியாக,தமிழ் ஹிந்து நாளிதழில் “ஜடாயு” எனும் புனைப்பெயரில் எழுதும் கட்டுரையாளர்  புருஷ சூக்தம் பற்றிய கட்டுரையில் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.


இதற்கெல்லாம் பதிலுரைக்கும் வண்ணமாக வேத நூல்களில் உள்ள ஆதாரங்களை எழுதுகிறேன் என்பதைப் பதிவு செய்திருந்தேன்.
வேதத்தில் பிராம்மணம், மந்திரம் என்னும் இரண்டு பாகங்களிருக்கின்றன. பிராம்மணம்(பிராமணம்) என்றால் பிராம்மணர் அனுஷ்டிக்கவேண்டிய விதிகள். மந்திரம் என்றால் ஸ்தோத்திரங்கள்; இவற்றில் வேதோக்த கருமங்களையும், அவைகளை உபயோகப்படுத்தும் விதங்களையும்,உதாரணங்களையும், தாக்கங்களையும், விடயங்களையும் பற்றி போதிக்கிற சங்கீதங்களிருக்கின்றன. அன்றியும் ஒவ்வொரு சங்கீதத்துக்கும் ஒவ்வொரு பிராம்மணமும், அந்த பிராம்மணங்கள் அந்தந்த வேதத்தின் கருத்தை ஸ்தாபிக்கின்றது எப்படியெனில், ருக்வேத பாகத்தின் பிரம்மணங்கள் ஹோதிரிகளுடைய கடமைகளைப்பற்றியும், யஜுர்வேதத்தின் பிராம்மணங்கள் அத்வர்யூ வின் கடமைகளையும், சாமவேதத்தின் பிராம்மணங்கள் யுத்கா திரிபாடும் சாமகானத்தையும் பற்றிச் சொல்லியிருக்கிறதன்றியில்; வேதபாகத்தில் புராதனமான ஐத்திரேய பிராமணமும் கௌசிதாதி பிராம்ணங்களும் ; எஜூர் (கருப்பு) வேதமாகத்தில் தைத்திரேய பிராமணமும், ௸ வெள்ளை வேத பாகத்தில் சாதாபத பிராமணமும்,சாமவேத பாகத்தில் எட்டு பிராம்மணங்களில் தாண்டிய பிராம்மணமும்,அதர்வணவேத பாகத்தில் கோபாத பிராம்மணமும் இருக்கிறது. இந்த பிராம்மண மந்திரங்கள் ஆரியருடைய ஆதி வசன காவியங்களாகவும் தோற்றுகின்றன. வேதத்தில் இப்படி பிராம்மண மந்திரங்கள் தவிர அநேக ஆரணியகங்கள் என்னும் வேறொரு வித பாகங்களும் இருக்கின்றன.
இதை “இந்து பைபிள் எனும் ஆரியர் சத்திய வேதம்” (1898 பதிப்பு)நூல் குறிப்பிடுகிறது.
‘பிராம்மணங்கள்’ என்பவை பிராம்மணர்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டிய விதிகள் என்பதே ஒரு பிரிவினை வாதமல்லவா?!
யஜுர்வேதத்தை,கிருஷ்ண யஜுர்வேத தைத்திரீய ஸம்ஹிதை என்றும் சுக்ல யஜுர்வேத வாஜசனேய ஸம்ஹிதை என்றும் கூறுவார்கள்.
இதில் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் மொழிபெயர்த்த “கிருஷ்ண எசுர்வேத தைத்திரீய சங்கிதை” (1942 ஆம் ஆண்டு பதிப்பு)ஏழாம் காண்டம் பத்தாம் பகுதி பிராமணம் 6 லிருந்து தொடங்கும் செய்யுட்களைப் பார்ப்போம்,
பிராமணம்: 6
प्रजापतिरकाप्रथत प्रजायेयेति समुखतस्त्रिवृतन्निरमिमीत तमनिर्देव तान्वसृज्यत गायत्री छन्दो रथन्तर साम ब्राह्मणो मनुष्याणामजः पशूनां तस्मात्ते मुख्या मुखतोयसृज्यन्त ।
படைக்க விருப்புற்ற பிரமன் படைப்பிற்குச் சாதனமாகிய அக்கினிட் டோமத்தை (அக்னி ஹோமம்)அநுட்டித்து அதன் வலியால் சத்திய சங்கற்பமுடையோனாகி தனது முகத்திலிருந்து, "திரிவிருக் (ஒன்பதுமுறை பாடும் துதி) முதலாயின உண்டாகுக, என்றெண்ணி உண்டாக்கினன். அதன்பின் தேவர்களுக்குள் அக்கினியையும், அதன்பிறகு சந்தங்களுக்குள் காயத் திரிச்சந்தத்தையும், அதன்பிறகு சாமங்களு (சாமப் பாடல்களு)க்குள் ரதந்தரம் என்னும் ஒரு சாமப் பாடலையும், அதன்பின், மனிதர்களுக்குள் அந்தணனையும். அதன் பின் விலங்குகளுக்குள் வெள்ளாட்டையும் படைத்தனன். இவைகள் முகத்திலிருந்து உண்டாக்கப்பட்டவைகளாதலின் முக்கியங்களாகின்றன. அதாவது, மேற்கூறப்படுபவைகளுக்குட் சிறந்தவைகள் என்பது,
இனி, இரண்டாவது இடத்திலிருந்து உற்பத்தியைக் காட்டுகின்றது.
பிராமணம் 7
उरसो बाहुभ्यां पञ्चदर्श निरमिनीत त मेन्द्रो देवतःन्वयन बृहत्सामर/जम्यो मनुष्याणामविः पशूनां तस्मात्तं वीर्वावन्तो वीर्याां ध्यसुज्यन्त ।
வீரியமுடைய தோள்களிலிருந்து பதினைந்துமுறை ஸ்தோமத்தையுண் டாக்கினன். அதன்பின் இந்திர தேவதையையும், பிறகு திரிஷ்டுப் என்னுஞ் சந்தத்தையும், பின்னர் 'பிருகத், என்னுஞ் சாமப்பாடலையும், பிறகு மனிதர்களுக்குள் அரசனையும், விலங்குகளுக்குள் பள்ளை ஆட்டையும் படைத்தனன். இவைகள், வீரிய மிகுந்த தோள்களிலிருந்து உண்டானவைகளாதலின் வன்மை மிகுந்தவைகள் என்பது.
மூன்றாவதிடத்திலிருந்து வரும் உற்பத்தியைக் காட்டுகின்றது.
பிராமணம் 8
मध्यतस्सप्तदर्श निर मे मीत तं विश्व देवा देवता अन्वसृज्यन्त जगती छन्दो
वरूप साम वैश्यो मनुष्याणां गावः पशूनां तमत्त्त आया अन्न वा नाद्ध्यसृज्यन्त तस्माद्भूयारसोइन्येभ्यो भूयिष्ठा हि देवता अस्वस
ज्यन्तः ।
உடம்பின் நடுவாகிய வயிற்றிலிருந்து பதினேழு முறை ஸ்தோமத்தைப் படைத்தனன். அதன்பின் விசுவே தேவர்களையும், அதன் பிறகு "சக்தி" என்னுஞ் சந்தத்தையும், அதன்பின், " வைரூபம்" என்னுஞ் சாமப்பாட லை யும், பிறகு மனிதர்களுக்குள் வணிகரையும, விலங்குகளுக்குள் கோக்களையும் படைத்தனன். இவைகள், உணவுந்தங்குமிடமாகிய வயிற்றிலிருந்து உண்டுடானவைகளாதலின் முதலாவதான போக்கியங்களாகின்றன. வணிகன், தனத்தைத் தேடுவதாலும், கோக்கள் பால் கொடுத்தலானும் போக்கியங்களாம். மிகுதியான வைசுவ தேவர்களைத் தொடர்ந்து உண்டானதால் வாணிபஞ் செய்கின்றவர்களும் எண்ணிறந்தோர்களாவர் என்பது.
நான்காமிடத்திலிருந்து வரும் உற்பத்தியைக் காட்டுகின்றது.
பிராமணம் 9
पत्त एकविशं निरमिमीत तमनुष्टुप् छन्दोऽन्बसुज्यत बराज साम शूद्रो मनुष्याणामश्वः पशूनां तस्मात्तौ भूतसंक्रामिणावश्यश्च शूद्रश्च तस्माच्छ्रद्रो यज्ञेश्नवक्लृप्तो न हि देवता अन्वसृज्यत तस्मात्पादावुप जीवतः पत्तोयसृज्येताम् ।
காலிலிருந்து இருபத்தொரு முறை ஸ்தோமத்தை உணடாக்கினன். பிறகு, 'அநுஷ்டுப், என்னுஞ் சந்தத்தையும், 'வைராஜம், என்னுஞ் சாமப் பாடலையும், பிறகு, மனிதர்களுக்குள் சூத்திரரையும், விலங்குகளுக்குள் குதிரையையும் படைத்தனன். சூத்திரரும் குதிரையும் ஒருவருக்கு உட்பட்டிருப்பவைகள். அதாவது, மூவருணத்தார்கட்குப் பணிவிடை செய்வதால் சூத்திரர்களும், தாங்கிச் செல்வதால் குதிரையும் உட்படுகின்றவைகள் என்பதாம். மற்றும், இங்கு மேற்கூறிய விடங்களிலிருந்து தேவதைகள் உண்டானது போல் பிரமனுடைய காலிலிருந்து ஒரு தேவதையும் உண்டாகாமையின் சூத்திரர்கட்கு எக்ஞம் உரியதன்றாம். காலிலிருந்து பிறந்தமை கொண்டே போதல் வருதலாகிய காலின்றொழிலால் சூத்திரரும் குதிரையும் பிழைக்கின்றன என்பது.
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை
The Yajur Veda (Taittiriya Sanhita) நூலிலிருந்து தருகிறேன்,
KANDA VII. THE EXPLANATION OF THE SOMA. SACRIFICE(continued)
PRAPATHAKA I
The One Day Sacrifices
vii. 1. 1.
Prajapati indeed is the best, for he sacrificed with it first. Prajapati desired, 'May I have offspring.' He meted out the Trivrt from his mouth. After it the god Agni was created, the Gayatri metre, the Rathantara Saman, of men the Brahman, of cattle the goat; therefore are they the chief, for they were produced from the mouth. From the breast and arms he meted out the Pancadaça Stoma. After it the god Indra was created, the Tristubh metre, the Brhat [4] Saman, of men the Rajanya, of cattle the sheep. There fore they are strong, for they were created from strength. From the middle he meted out the Saptadaça Stoma. After it the All-gods as deities were created, the Jagati metre, the Vairupa Saman, of men the Vaiçya, of cattle cows. Therefore are they to be eaten, for they were created from the receptacle of food. Therefore are they more numerous than others, for they were created after the most numerous of the gods. From his feet he meted out the Ekavinça Stoma. After it the Anustubh metre [5] was created, the Vairaja Saman, of men the Çudra, of cattle the horse. Therefore the two, the horse and the Çudra, are dependent on others. Therefore the Çudra is not fit for the sacrifice, for he was not created after any gods. Therefore they depend on their feet, for they were created from the feet. The Trivrt is the breaths; the Pañcadaça the half-months; the Saptadaça Prajapati; these worlds are three; the Ekavinça is the sun yonder In this they rest, in this they find support. He who knows thus rests on this, finds, support in this.
“புருஷ சூக்தம்” நூலில் மனிதன் பிறப்பு பற்றி சுருக்கமாகச் சொன்னால்,
பிரம்மனோ,பிரஜாபதியோ,புருஷனோ மனிதனைப் படைக்கும் போது, தனது முகத்திலிருந்து பிராம்மணர்களையும்,தோள்களிலிருந்து க்ஷத்ரியனையும், வயிற்றிலிருந்து வைசியனையும், கால்களிலிருந்து சூத்திரனையும் படைத்தான்.முத்திலிருந்து பிராம்மணன் உருவாக்கப்பட்டபோது அவனோடு அக்னி தேவனும் வெளிப்படுகிறான்.
தோள்களிலிருந்து க்ஷத்ரியனைப் படைக்கும்போது இந்திரன் வெளிப்படுகிறான்.வயிற்றிலிருந்து வைசியனை படைக்கும் போது விசுவே எனும் தேவன் வெளிப்படுகிறான்.ஆனால் கால்களிலிருந்து சூத்திரனைப் படைக்கும்போது தேவதைகள் யாரும் உண்டாகவில்லை. இதனால் சூத்திரன் யக்ஞம் வேள்வி யாகம் ஹோமம் இவற்றுக்கு தகுதியற்றவனாகிறான்.பிரம்ம வித்தைக்கு (பிரம்ம சூத்திரம்,வேத மந்திரம் பயில்வதற்கு)அருகதையற்றவனாகிறான்.
இக்காரணத்தினால் சூத்திரன் முதல் மூன்று வர்ணத்தவருக்கு சேவகமும் பணிவிடையும் அடிமை போன்று செய்ய வேண்டியுள்ளது.ஆனால்,முதல் மூன்று வர்ணத்தவர்களோ காயத்ரி போன்ற மத்திரங்களை உச்சரிக்கும் இருபிறப்பிற்கு தகுதியுள்ளவர்களாகிறார்கள்.
ஆக, வேத நூல்களிலேயே பிராம்மணர்கள்,க்ஷத்ரியர்கள்,வைசியர்கள் ஏன் மேலானவர்கள், சூத்திரன் ஏன் அவர்களைவிட கீழானவன் என்பதற்கான விரிவான விளக்கங்களைக் கூறுகின்றன.இந்தக் காரணங்கள் தெரிந்திருந்தும் காலம் காலமாக சூத்திரனை அடிமைப்படுத்தியதோடு அல்லாமல் வேதங்களில், எல்லா வர்ணமும் சமமாகவே கூறப்பட்டுள்ளதெனும் பொய்யை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
கடந்த நான்கு பதிவுகளின் வாயிலாக “புருஷ சூக்தமும்” அதில் கூறப்பட்டிருக்கும் வர்ணாசிரம தொடக்கம் பற்றியும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்தியுள்ளேன் என நம்புகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள யஜுர் வேதம் தவிர மற்ற வேத நூல்களிலும் ஆங்காங்கே வர்ணம் பேதங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு.
நான் ஹிந்து, வர்ணாசிரமத்தை கடைப்பிடிக்கிறேன் என்கிறவர்கள்  இனிமேலாவது தயவுசெய்து சிந்தியுங்கள், நாம் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணருங்கள்.வர்ணாசிரமத்தின் மூலமே பொய் என்பதையும்,அது கற்பனை என்பதையும் உணருங்கள்.
வர்ண சாதி வேற்றுமைகளைப் போதிக்கும் வேதங்களைப் புரிந்து கொள்வோம்.இப்படிப்பட்ட கற்பனையான வேதங்களை அடிப்படைப்படாகக் கொண்ட கொண்ட மற்ற சனாதன நூல்கள் எந்தத் தரத்தில் இருக்கும் என்பதை உணர்வோம்.சனாதன நூல்களின் மூலமே பொய் மற்றும் கற்பனையில் துவங்குகிற உண்மையை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்வோம்.
இனிமேலாவது வேதங்களைக் கூறி ஏமாற்றுகிறவர்கள் சிந்திக்கட்டும்,ஏமாற்றுவதை நிறுத்தி, வேற்றுமை பாராட்டாது சக மனிதரை மதித்து நடக்கட்டும்.
மனிதர்களுள் சாதி வர்ண வேற்றுமைகள் எதும் இல்லை, சக மனிதர்களை சமமாக நடத்துவோம்,அன்பை விதைப்போம்,மனிதம் வளர்ப்போம்.

கருத்துகள் இல்லை: