ஞாயிறு, 23 ஜனவரி, 2022

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கரோனா... பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்குமா..?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி துவங்க உள்ளதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு கடந்த இரண்டாம் அலையை போல் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த எண்ணிக்கை நாடாளுமன்ற மொத்த பணியாளர்களில் 62 சதவீதம் ஆகும். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவை மத்திய அரசு ஒரிரு தினங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: