Chinniah Kasi : *அனுப்புநர்* கு.இராமகிருட்டிணன் மற்றும் அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள், கோயம்புத்தூர்.
*பெறுநர்*
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம். *மதிப்பிற்கு உரியவர்களுக்கு,*
*பொருள்:* ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் கோயம்புத்தூரில் நடைபெறுவதை தடுத்து நிறுத்திட வேண்டி....
வணக்கம்,
ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்வா மதவெறி அமைப்பின் பயிற்சி முகாமானது வருகிற 31.12.2021 முதல் 02.01.2022 வரை கோயம்புத்தூர் கே.எம்.சி.எச். பள்ளி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மகாத்மா காந்தி கொலை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் இந்திய அரசினால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இன்னும் ஆர்.எஸ்.எஸ். மதவெறி கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அத்தகைய அமைப்பின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பும் ஒரு மதவெறி பாசிச அமைப்பாகும்.
மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி தூண்டி வருகிறது.
பெண்களிடையே மதவெறியைத் தூண்டி, ஆயுத பயிற்சி அளித்து, கலவரங்களில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளிலும் மேற்படி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
ராஷ்ட்ர சேவிகா சம்தியின் பயிற்சி அறிவிப்பில் 13 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்கள் பங்கேற்கலாம் என்றும், பயிற்சி செய்வதற்கு சுடிதார் கண்டிப்பாக கொண்டு வரவும் என்றும் நிபந்தனை விதித்து இருப்பதானது மேற்படி அமைப்பினர் தமிழக அரசுக்கும், அனைத்து மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எதிரான ஆயுத பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது.
கோயம்புத்துர் மதவெறி கலவரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டது ஆகும். தற்போதும் மதகலவரங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ள அபாயகரமான பகுதியாகும். மக்கள் தற்போது ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பின் மதவெறி பயிற்சி நடவடிக்கையினால் மீண்டும் கோயம்பத்தூர் மதக்கலவர பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
குழந்தைகள் முதல் அனைவருக்கும் மதவெறி, ஆயுத பயிற்சியை கொடுப்பதற்கு அனைத்து மதத்தவரும் கல்வி பயின்று வரும் KMCH பள்ளி கல்லூரி வளாகத்தினை அனுமதிப்பது என்பது வெறுப்பு அரசியலை மாணவர்களிடையே பரப்புகின்ற ஒரு தவறான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பின் முகவுரை நோக்கங்களுக்கும், மக்களின் ஒற்றுமைக்கும், கோயம்பத்தூரின் அமைதிக்கும் எதிரானதாகும்.
எனவே சமூகம் அவர்கள், கோயம்புத்தூர், KMCH பார்மசி கல்லூரியில் நடைபெறவிருக்கும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பின் மதவெறி, ஆயுத பயிற்சியினைத் தடுத்து நிறுத்தி, கோயம்புத்தூர் மக்களின் ஒற்றுமையையும், அமைதியான வாழ்க்கையையும் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
1. தோழர்.கு.இராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
2. தோழர் ஜோதிகுமார்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
3. தோழர் சுசி கலையரசன், மண்டலச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4. தோழர் ரவிக்குமார் பொதுச்செயலாளர், ஆதித் தமிழர் பேரவை
5. தோழர் வெண்மணி தலைவர், திராவிட தமிழர் கட்சி
6. தோழர் நேரு தாஸ், மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
7. தோழர் மலரவன், புரட்சிகர இளைஞர் முன்னணி
8. தோழர். ஜூலியஸ், மக்கள் அதிகாரம்
9. கோவை மக்கள் ஒற்றுமை மேடை
10. தோழர்.வேல்முருகன், சி.பி.ஐ.எம்.எல்.
11. தோழர் சுர்ஜித், சி.பி.ஐ.(எம்.எல்) ரெட் ஸ்டார்
12. தோழர். அகத்தியன், தலைவர், தமிழ் சிறுத்தைகள் கட்சி
13.தீண்டாமை ஒழிப்பு முன்னணி
14. தோழர் தினேஷ், மே 17 இயக்கம்
15. தோழர். பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
16. தோழர் ரகுபதி திராவிட மக்கள் இயக்கம்.
17.தோழர்.முருகப்பாண்டியன், மக்கள் அதிகாரம்
24.12.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக