செவ்வாய், 28 டிசம்பர், 2021

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கூட பராமரிக்காமல் விட்ட பராரிகள் அதிமுகவினர் !

 Raja Rajendran Tamilnadu :    குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, எளியோர்களுக்கு, நிறைவான வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் !
1975 - 1976 அன்று எங்களுடைய பார்த்தசாரதி நகர் குடியிருப்பை முதல்வராயிருந்த கலைஞர் தன் அமைச்சரவை புடைசூழ திறந்துவைத்தார் !
மொத்தம் 120 வீடுகள்.  ஐந்து கட்டிடங்கள்.  தரைத்தளத்தோடு சேர்த்து ஒவ்வொரு கட்டிடத்திலும் நான்கு மாடிகள்.  கிட்டத்தட்ட 600 + மக்கள் அதில் குடியிருந்தனர் !
99% மக்கள் வேறெங்கும் சொந்த வீடுகளல்லாத உண்மையாகவே எளியோர்கள்.  அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு அட்டாச்டு பாத்ரூமோடு வீடு வாய்த்தது கிட்டத்தட்ட வரம் !
அந்தக் கட்டிடம் அதன் பின் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் திடமாக இருந்தது. அதாவது கட்டிடங்கள் உறுதியாக இருந்தன !
ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்குள் மர ஜன்னல், கதவு போன்றவைகள் பெரும்பாலும் உளுத்து அல்லது கரையான் அரித்து, வீணாய் போனது.  இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியால், அதை சரிசெய்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு வாழ்வில் பெரும்பாலோர், முன்னேறியிருந்தனர் !


மேல் தளங்கள் ஒழுகுதல், விரிசல், பலவீனமான பால்கனி சுவர் பற்றி உரிய அலுவலரிடம் புகாரளிப்போம்.  அந்தக் கட்டிடங்களை கலைஞர் திறந்து வைத்தார், எனவே நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்கிற காண்டில் எம்ஜிஆர் அரசு எந்த உதவியுமே செய்ததில்லை.  இதைக் கட்டித் திறந்து வைத்தக் கையோடு கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு அவர் மீண்டும் ஆட்சிக்கு வர 13 வருடங்கள் ஆனது !
1989 - 1991 ல் சிற்சில பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.  அப்புறம் அஞ்சு வருஷம் ஸ்டீல் மங்கையின் ரணகள ஆட்சி !
1996 ல் கலைஞர் மீண்டும் வந்தபின், பலவீனமான பால்கனி சுவர் இடிக்கப்பட்டு திடமான பால்கனி கட்டித்தரப்பட்டது.  குடிநீருக்காக அதுவரை தெருத் தெருவாய் அலைந்துக் கொண்டிருந்த எங்களுக்கு மெட்ரோ வாட்டர் மாடிவீடு தேடி வர டேங்க், மோட்டார் வசதி என யாவும் கிட்டின !
பொதுவாக அரசு எழுப்பும் கட்டிடங்களுக்கு ஆயுள் 20 வருடங்கள் என்பார்கள்.  செப்பனிட்டுக் கொண்டே இருக்காவிட்டால் அதன்பின் வேகமாக சிதிலமடையும் !
1977 க்குப் பின் எம் ஜி ஆர் ஆட்சியில் கட்டப்பட்ட பல குடிசைமாற்று வாரிய வீடுகள் இருபது வருடங்கள் கூட தாங்காமல் பாழடைந்து போயின.  மாறாக கலைஞர் கட்டிய கட்டிடங்கள் 2010 வரைக்கும், கிட்டத்தட்ட 35 வருடங்கள் கல் போல நின்றன !
தொகுதி சீரமைப்பில் இந்தப் பகுதி ராயபுரத்தில் வந்ததும், ஜெயக்குமார் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதுக் கட்டிடங்கள் கட்டித் தருகிறோம் என வாக்களித்தார் !
மக்கள் எளிதில் நம்பவில்லை.  இந்தக் கட்டிடங்களை இடிக்க என்ன தேவை ?  பராமரிப்பை மட்டும் செய்யுங்கள் போதும் என மக்கள் எதிர்த்தனர்.  முக்கிய காரணம், இது போன்று தரமான வீடுகளை அவர்கள் கட்டித்தர மாட்டார்கள் என மக்கள் அவநம்பிக்கை கொண்டதுதான் !
பலமுறை பரிவாரங்களுடன் படையெடுத்து அம்மா சத்தியம் என மக்களை நம்பவைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார்.  பிறகு ஒரு வழியாக மக்கள் நம்பி ஏற்க, கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பின், கலைஞர் கட்டித்தந்த அந்த ஐந்து அடுக்ககங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.  இடித்தவர்களே கட்டிடங்களின் உறுதித்தன்மை கண்டு வியந்தார்கள் !
புளியந்தோப்பில் இவன்கள் கட்டிய கட்டிடங்கள்தான் தரத்துக்கான சாட்சி !
கோவையில் இவன்கள் கட்டிய குடிசைமாற்று வாரிய வீடுகளெல்லாம் மக்கள் குடிவரும் முன்பே பூமாதேவி மடி தேடி புதைந்தன !
இந்த அழகில் இவன்கள் 1993 ல், கட்டிய திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரியத்தின் ஒரு கட்டிடம் இன்று தரைமட்டமாகிப் போயிருக்கிறது !
கடந்த பத்து வருடங்களில் பலமுறை புகாரளித்தும் முறையாகச் செப்பனிட துப்பில்லாமல் விட்டதில், 27 வருடங்கள் கூட அந்தக் கட்டிடம் தாங்கவில்லை.  பேராறுதல் உயிரிழப்பு நிகழாதது.  இரவு வேளைகளில் விழுந்திருந்தால் பல உயிர்கள் பலியாகியிருந்திருக்கும் !
உடனடியாக அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்பட்டிருக்கிறது.  மாற்று வீடுகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது !
தங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கூட பராமரிக்காமல் விட்ட பராரிகள் அதிமுகவினர் !
இன்னும் எத்தனை பாடாவதி கட்டிடங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார்களோ ?  அதிலொன்று இவர்கள் எங்களுக்கு மீண்டும் கட்டிக் கொடுத்ததுமுள்ளது

கருத்துகள் இல்லை: