வியாழன், 30 டிசம்பர், 2021

ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு எதிராக கோவையில் தபெதிக-வினர் கோவை ராமகிருஷ்ணன் உட்பட கைது!

rss

veerasamy sivadevan  - .toptamilnews.com  :  கோவையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் உள்ள பள்ளிகளில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை விளாங்குறிச்சி சாலை உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா  மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த செயலை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: