வியாழன், 30 டிசம்பர், 2021

11 சிறுவன் தலையை துளைத்த துப்பாக்கி குண்டு! புதுக்கோட்டை மாவட்டம் துப்பாக்கி பயிற்சி...

 

 நக்கீரன் -பகத்சிங்  : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி நார்த்தாமலை, அம்மாசத்திரம் மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டு புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் பாய்ந்து மண்டை ஓட்டை உடைத்துக்கொண்டு மூளையில் தங்கியது.
சுருண்டு விழுந்த சிறுவனை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையளித்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு தயாராக இருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினர் நீண்ட நேரம் போராடி சிறுவன் மூளையில் இருந்த அலுமினிய துப்பாக்கிக் குண்டு மற்றும் உடைந்த எலும்பு துண்டுகளை அகற்றியுள்ளனர். மேலும், சிறுவன் புகழேந்தி மயக்க நிலையில் உள்ளதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் 24 மணி நேரத்திற்கு பிறகே மற்ற பாதிப்புகள் குறித்து தெரிய வரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது


கருத்துகள் இல்லை: