பெரியார் நேசன் : ஏன் தொடர்ச்சியாக தலைவர் கலைஞர் தாக்கப்பட்டார், நிராகரிக்கப்பட்டார், பழி வாங்கப்பட்டார், பலி கொடுக்கப்பட்டார்.. இன்றும் அவை ஏன் திமுக,விற்கு தொடர்ந்து செய்யப்படுகின்றது என யோசித்தால் கலைஞரின் பழைய பேட்டி ஒன்று ஞாபகம் வந்தது..
கேள்வி :- “எதிலும் இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
கலைஞர் :- “அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள்”
கேள்வி :- இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள்.,கிட்டத் தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?
#கலைஞர் :- ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று தாக்குதல் நடத்தும்....
ஒரு சிறுபான்மை விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு மாநிலத்தின் இரு மைய சக்திகளில் ஒன்றாகத் தன்னை நிலை நிறுத்தியவர் கலைஞர் ஆனாலும் அவர் சாதிய ரீதியான சீண்டல்களை உண்ர்ந்திருக்கிறார்..ஒடுக்கப்பட்டோருக்கான தலித் அரசியல் பேசுபவர்கள் கூட அவரை இகழ்வதை பார்க்கும்பொழுது,எனக்கும் இதுதான் பலமுறை தோன்றியது உண்டு தன்னிலும் கீழ் படிநிலை சாதியில் பிறந்தவர் என்ற சாதிய பார்வையின் வெளிப்பாடு என்று...
பேராசிரியர் பேட்சன் "தன் பரம்பரைக் குணங்கள் பற்றிய மெண்டலின் கொள்கைகள்" என்னும் நூலில்.. குடும்ப வழி குணங்கள் பற்றி இப்படியாக கூறுகிறார்... ஒரு குறிப்பிட்ட வம்சாவழியின் உயர் குணங்கள்,பரம்பரையாக அந்த வம்சாவழியைச் சேர்ந்த மக்களை ஒரு குறிப்பிட்ட முறையில்தான் வந்தடைகின்றன என்று கூற முடியாது,இத்தகைய குணங்களும் குறிப்பிடதக்க வளர்ச்சி அடைந்த உடல் ஆற்றலும் ( உருவ,நிற அமைப்பை அப்படி சொல்கிறார்) அந்தந்த மக்களை வந்தடைவது, ஒரு மரபியல் அம்சத்தை பெற்று இருப்பதனால் மட்டும் அல்ல, மேலும் பல காரணிகளும் ஒன்றினைவதால்தான்...என்கிறார்..இக்கூற்று படி சாதிய ரீதியான பார்வை என்பது வம்சாவழியாக மட்டுமல்ல இவர்கள் மரபு வழியாகவும் வந்து விடுகிறது...அப்படி பல தலைமுறை பழக்கங்களால் மரபு ரீதியாக கடத்தப்படும் சாதிய புத்திகளை..ஒரு தலைமுறை சமூக நீதி திட்டங்களால் சரி செய்து விட முடியாது..இன்னும் நான்கு தலைமுறைக்கு தொடர்வதினால் மட்டுமே இந்த சமூகநீதி பார்வையை மரபுவழியாக நாம் கொண்டுவர முடியும்..இதைத்தான் அண்ணல் அம்பேத்கர்..சாதி என்பது ஒரு மனநிலை என்றார்..
மனிதர்களை சாதியாக அடையாளம் காணத்துடிக்கும் இந்த அணுகுமுறைகள் சாதிய உளவியலுக்கும் - சாதிவெறிக்கும் இந்த பரம்பரையாக கடத்தப்படும் குணங்களே அடிச்சுவடியாக அமைகிறது...அதுவே பல ஆயிரம் சமூகநீதி திட்டங்கள் செய்த கலைஞரை விடுத்து எம்ஜிஆரிடம் பாடம் படிக்க வேண்டும்னு திமுக ஓட்டுகளால் வெற்றிபெற்ற ரவிக்குமாரினால் சொல்ல முடிகிறது, கட்டுவிரியன்னு கூற முடிகிறது,கலைஞர் நன்றாக நாதஸ்வரம் ஊதுவார் எனும் வார்த்தைகளில் நிலைக்கின்றது...நாலு படம் எடுத்த ஒரு சாதாரன சினிமா இயக்குனர் ரஞ்சித்தை தலைவனாக ஏற்கும் கூட்டம் கலைஞரை தொடர்ச்சியாக இகழ்ச்சி செய்வதில்
நிற்கிறது...
இதை மாற்ற சாதிய ரீதியான மரபு வழி கடத்தல்கள் மாற்றப்பட வேண்டும்..நாங்கள் யதார்த்த பார்ப்பனர்கள் என்றோ, நாங்கள்தான் சத்திரியன் என்றோ, நாங்கள் ஆண்ட சாதி என்றோ இவர்கள் பேசித்திரியும் பெருமைகள் சமூகநீதி திட்டங்களால் உளவியல் ரீதியாக கலையப்பட வேண்டும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக