வியாழன், 30 டிசம்பர், 2021

மலேசியாவில் தமிழ் சீன மொழி பள்ளிக்கூடங்கள் தொடர தடையில்லை! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி

 anegun.com -குமரன் KumaraN தமிழ் – சீனப்பள்ளிகள் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல ! தொடர்ந்து இயங்கலாம் ! – கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !
கோலாலம்பூர் தாய்மொழ்ப் பள்ளிகளுக்கு எதிராக மலாய் அமைப்புகல் தொடுத்திருந்த வழக்கில் அப்பள்ளிகள் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல எனவும் அவை தொடர்ந்து இயங்கலாம் எனவும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது, மேலும், அந்த வழக்கை தள்ளுபடியும் செய்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறன்பானவை என  அறிவிக்க Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS), Majlis Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim) dan Gabungan Penulis Nasional (Gapena) ஆகிய அமைப்புகள் வழக்கு தொடுத்திருந்தன.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கஸாலி, அப்பள்ளிகளில் பயன்பாட்டு – கற்றல் கற்பித்தல் மொழியாக தமிழ்மொழியும் சீன மொழியும் இருப்பது சட்டத்திற்கு உட்பட்டதாகும் எனக் கூறினார்.

அதே சமயம், அவை அரசியல் அமைப்புச் சட்டத்தால் காக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

கட்டாயமாகவும் முதன்மைமொழியாகவும் தேசிய மொழியான மலாய்  மொழியைப் பயன்படுத்த அப்பள்ளிகள் அரசாங்க நிறுவனமோ அல்லது அதிகாரத்துவ அமைப்போ அல்ல என அவர் சொன்னார்.

    “Kewujudan dan penubuhan sekolah-sekolah berkenaan tidak bercanggah dengan Perlembagaan Persekutuan malah kewujudannya telah diiktiraf dan dilindungi sejak merdeka.

    “Penggunaan bahasa lain selain bahasa Malaysia yang merupakan bahasa kebangsaan juga tidak bertentangan dengan Perlembagaan kerana sekolah venakular bukanlah satu badan statutori atau pihak berkuasa awam yang wajib menggunakan bahasa kebangsaan,”

கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம், GPMS, Mappim ஆகிய இரு அமைப்புகள் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கைத் தொடுத்திருந்தன.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 152 (1) க்கு எதிராக அவை இருப்பதாகவும் தேசிய மொழியைப் பயன்பாட்டு – கற்றல் கற்பித்தல் மொழியாகப் பயன்படுத்த வில்லை எனக் குறிப்பிட்டிருந்தன.

கல்விச் சட்டம் 1996 பிரிவு 2,17, 28 ஆகியவற்றின் படி தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் – சீனம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அது கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 152 (1) (a) க்கு எதிராக உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தன.

எனவே, அவை சட்டத்திற்கு எதிராக இருக்கின்றதாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்த மலாய் அமைப்புகள் கோரி இருந்தன.

கருத்துகள் இல்லை: