மாலைமலர் : இந்த கார்கள் பிரதமரின் பயன்பாட்டிற்காக டெல்லியில் உள்ள ஐதராபாத் விருந்தினர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
புதுடெல்லி: பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டு உள்ளது.
இந்த காரில் வி.ஆர்.10 லெவல் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கார்கள் வாங்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள் இது ன்ற 2 கார்களை வாங்கி உள்ளனர். ஒரு காரின் விலை ரு.12 கோடியாகும்.
காரின் கண்ணாடிகள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டது. மேலும் காரின் உள்ளே பாலிகார்பனேட் பூச்சுபூசப்பட்டு உள்ளது. ஏ.கே.47 ரக துப்பாக்கி கொண்டு சுட்டாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றபோது அவர் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரக கார்களையே பயன் படுத்தினார். அதன்பிறகு லேன்ட் ரோவர் ரக கார்களில் பயணம் செய்தார். பின்னர் டொயோட்டா லேன்ட் குருசர்ரக கார்களை பயன்படுத்தினார். இப்போது மெர்சிடிஸ் மெபெக் எஸ் 650 ரக கார்களுக்கு மாறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக