ந. சரவணன் : மன நிறைவான கலந்துரையாடலாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு அழைத்தபோது இன்முகத்துடன் வரவேற்று நிகழ்விற்கு இசைவு தந்ததுடன், சுமார் ஒருமணி நேரம் பொறுமையாக இருந்து எமது முகாம் மக்களுடன் கலந்துரையாடிய சிறுபான்மை நலத்துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் அகதிகள் பிரிவு அமைச்சர் மாண்புமிகு K.S.மஸ்தான் அவர்களுக்கு
எமது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியினையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாகவே இடையறாது பணி செய்து முகாம் மக்கள் குறித்த பல்வேறு விபரதிரட்டுகளை சேகரித்து அரசின் திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருந்ததுடன் எப்போதும் கரிசனையுடன் நடந்துக்கொள்ளும் மறுவாழ்வு துறையினர் சார்பாக மறுவாழ்வு துறை துனை ஆனையூர் உயர்திரு. இரமேஷ் கிருஷ்ணன் அவர்களும் ஆரம்பம் முதல் இறுதிவரை இருந்து மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததுடன் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசியது மிகுந்த மகிழ்வையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
வழக்கறிஞர் ரோமியோ ராய் ஆல்பர்ட் அவர்கள் சட்டம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் விளக்கமளித்ததுடன் சட்டம் மறுவாழ்வு முகாம் மக்களை அனுக வேண்டிய விதம் குறித்தும் சிறப்பாக பதிவு செய்யதார்.
நிகழ்வு நடக்க உறுதுணையாக இருந்ததுடன் கொரோனா காலங்களில் தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு பனிகளை செய்து, மறுவாழ்வு முகாம் மக்களுக்காகவும் உதவிகள் செய்து வரும் ஜெர்மன் நாட்டில் வசிக்கும் திருமதி. ஜோசப்பின் ரம்யா அவர்களும் மகளிர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சம்மந்தமாக கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து சிறப்பித்தார். இக்கலந்துரையாடலின் முக்கிய பங்கேற்பாளர்களாக முகாம் மக்கள் சார்பாக சிறப்பான கருத்துக்களை முன்வைத்தனர் எமது தோழமைகள், திரு.அனோஜன், மாணவி சாரதி, திருமதி.அனுசுபோ திருமதி.புஷ்பலதா, திருமதி. அனிதா, மாணவி சதூர்ஷா, திரு.அருள், மாணவி. நிரஞ்சனா, திரு.அசோக் குமார்,திருமதி.புனிதமலர் திரு.வினோதன், திரு.அருள். தேவராஜ் மற்றும் சில தன்னார்வலர்கள்.
நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உதவியாளர்கள் திரு.ரிஷ்வான், திரு.ஸ்மாயில் என அனைவருக்கும் எங்கள் முகாம் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உடனிருந்து ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து பயணப்படுவோம் செயல்படுவோம்....
#ministerksmasthan
#TNGovt
#refugees
#wewantindiancitizenship
#tnrehabilitationdeptforsrilankantamils
#tncm_mkstalin
#welfareshemeforsrilankantamils
#CM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக