சனி, 1 ஜனவரி, 2022

ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையா? கரக்பூர் ஐஐடி காலண்டரால் தீவிரமாகும் சர்ச்சை - முழு விவரம்

ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
BBC -பிரபாகர் மணி திவாரி  -     கொல்கத்தாவில் இருந்து பிபிசி ஹிந்திக்காக : ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
பட மூலாதாரம், IIT KHARAGPUR
இந்திய தொழில்நுட்பக் கழகம்-கரக்பூரின் 2022 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியில் இடம்பெற்ற ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையை நிராகரிக்கும் கருப்பொருள், கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியது. ஆனால், இது வெறும் நுனிப்புல் அளவு மட்டுமே என்று கூறுகிறார் அந்த நாள்காட்டியின் கருப்பொருளுக்கு பின்புலமாக இருந்த பேராசிரியர் ஜாய் சென்.
மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் இந்தியாவின் பழமையான இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (IIT), இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து அடிபடுகிறது.
அதன் 70 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு வேலைவாய்ப்புகளுக்கான சாதனையைப் படைத்ததற்காக இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் தலைப்புச் செய்திகளில் அது இடம்படித்தது. இந்த நிலையில், இப்போது அந்த கல்விக்கழகம் தயாரித்துள்ள காலண்டர் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.

இதற்கு முன்பு, கொல்கத்தாவின் ஹெளராவில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் மெய்நிகர் பட்டறையில் பகவத்கீதை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஆனால், தற்போது இந்த காலண்டர் சர்ச்சை, ஐஐடியின் சாதனை வேலைவாய்ப்பு வெற்றியை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

ஆனால், இதில் தவறு ஏதும் இல்லை என்றும், ஆரிய தாக்குதல் குறித்த கட்டுக்கதையை உடைக்கும் முயற்சி இது என்றும், இந்த நாள்காட்டியை தயாரித்துள்ள கல்வி அமைப்பின் 'சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் ஃபார் இந்தியன் நாலெட்ஜ் சிஸ்டம்', கூறுகிறது.

ஆனால், இந்த தொழில்நுட்ப கல்விக்கழகம் இந்துத்துவ கொள்கையை பரப்பும் முயற்சியில் வரலாற்றை திரித்துக்காட்ட முயற்சிப்பதாக பல கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை. காலண்டர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், வாஸ்து அறிவியல் (கட்டடக்கலை), சுற்றுச்சூழல் அறிவியல் (சுற்றுச்சூழல் ஆய்வுகள்), பொருளாதாரம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளைத் தொடங்க இந்த கல்விக்கழகம் முடிவு செய்துள்ளது.

காலண்டர் எப்படி இருக்கிறது?
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

பட மூலாதாரம், IIT KHARAGPUR
படக்குறிப்பு,
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

இந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் மேஜை நாள்காட்டி, அந்த கல்வி நிறுவனத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் வெளியிடப்பட்டது. அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அங்கிருந்தார்.

இந்த காலண்டர் இத்தனைப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு எதைக் கொண்டிருந்தது?

'இந்திய அறிவு அமைப்பின் அடித்தளத்தை மீட்டெடுப்பது' என்ற தலைப்பில், இந்த காலண்டர் இந்தியாவின் பாரம்பரிய ஆய்வு முறையை சித்தரிக்கிறது.

இந்த நாட்காட்டியில், ஒவ்வொரு மாத பக்கத்திலும் உலகப் புகழ்பெற்ற நபர்களின் படங்கள் மற்றும் பாடங்களின் பெயர்கள் இந்திய கணித மொழியில் எழுதப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் மாதத்தின் பக்கத்தில், விஷ்ணு புராணத்தைக் குறிக்கும் வகையில் சப்த ரிஷி இடம்பெற்றுள்ளார். அவர் இந்திய ஞானத்தின் முன்னோடி என்று வர்ணிக்கப்படுகிறார்.

இதேபோல், மார்ச் மாத பக்கத்தில் அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி எழுதப்பட்டுள்ளது. பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகைப்படமும் உள்ளது.
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

பட மூலாதாரம், IIT KHARAGPUR
படக்குறிப்பு,
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

இந்த காலண்டரில் ஆரியர்களின் படையெடுப்பை கற்பனை என்றும், இந்துக்களை இழிவுபடுத்தவே திராவிடர்கள் உள்ளூர்வாசிகள், ஆரியர்கள் அவர்களை தாக்கினார்கள் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

ஆரியர்களின் தாக்குதல் என கூறும் கட்டுக்கதைகளை காலண்டர் புறந்தள்ளியிருக்கிறது.

முழு நாட்காட்டியிலும் வேதங்கள் மற்றும் புராணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் இந்திய நாகரிகம் மற்றும் கலாசாரத்தை கோடிட்டுக்காட்டி, இந்த வாதங்களுக்கு ஆதரவாக ரிஷி அரவிந்த் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற மாமனிதர்களின் கூற்றுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன,

கல்விக்கழகத்தின் இயக்குநர் வீரேந்திர குமார் திவாரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே மற்றும் நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரின் பெயர்கள் இந்த காலண்டரின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளன.
சர்ச்சை மற்றும் எதிர்ப்பு
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

பட மூலாதாரம், SANJAY DAS
படக்குறிப்பு,
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
ஐஐடி வாயிலில் ஆர்பாட்டம் நடத்திய'அகில் பாரத் சிக்க்ஷா பச்சாவோ சமிதி'
ஐஐடியின் இந்த காலண்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கும், நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்விநிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்பது அவர்களது கேள்வி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைப்பின் வாயிலிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

"ஐஐடியின் காலண்டர், வரலாற்றையும் உண்மைகளையும் திரித்துக்காட்டும் முயற்சியாகும். இதில், ஆரியர்களின் தாக்குதலை கட்டுக்கதை என்று கூறி வரலாற்றை பொய்யாக்கும் முயற்சி நடந்துள்ளது. அறிவியலுக்குப் புறம்பான, மோசமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் வழிநடத்தப்படும் மத்திய அரசின் செயல்திட்டத்தை, இன்ஸ்டிட்யூட் நிர்வாகமும் அதன் சில ஆசிரியர்களும் தங்கள் லட்சியங்களுக்காக அமல்படுத்த முயற்சிக்கின்றனர்" என்று சேவ் எஜுகேஷன் கமிட்டியைச் சேர்ந்த தபன் தாஸ் குறிப்பிட்டார்.

ஐஐடி வாயிலில் ஆர்பாட்டம் நடத்திய 'அகில் பாரத் சிக்க்ஷா பச்சாவோ சமிதி' என்ற அமைப்பு, இந்த நாட்காட்டி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இந்துத்துவ கருத்தை வலுப்படுத்துவதாகக்கூறுகிறது.

​​"இந்த நாட்காட்டியில் இந்திய அறிவு அமைப்பு என்ற பெயரில் பல்வேறு புராண மற்றும் வரலாற்றுக்குப் புறம்பான விஷயங்கள் அறிவியல் வரலாறாக முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் அறிவியல் கல்வியில் கறை படிந்த அத்தியாயமாக இது பதிவு செய்யப்படும்," என்று இந்த அமைப்பின் மேற்கு வங்கக் கிளைச் செயலர் தருண் நஸ்கர் தெரிவித்தார்.

இந்துத்துவ கொள்கையை திணிக்கும் மற்றும் வரலாற்றை திரித்து எழுதும் முயற்சி இது என்று இடதுசாரி அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.

சிபிஎம் கட்சியின் கொள்கைபரப்பு பத்திரிகையான 'கணசக்தியில்' இந்த எதிர்ப்பு குறித்த செய்தி முக்கியமாக இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க அறிவியல் அமைப்பும் இந்த காலண்டரை விமர்சித்துள்ளது.
ஆரியர்கள் பற்றிய கூற்றுகள்
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

பட மூலாதாரம், IIT KHARAGPUR
படக்குறிப்பு,
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

​​"இந்த காலண்டர் மூலம் பல கற்பனைக்கதைகளை வரலாறு என்று சொல்லி வாதங்களை முன்வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் குறித்த ஆராய்ச்சி என்ற பெயரில் முன்வைக்கப்படும் அனைத்து உண்மைகளும் ஆதாரமற்றவை. இந்த நாட்காட்டி மூலம். இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சி செய்யப்படுகிறது. இந்த முயற்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது," என்று அமைப்பின் தலைவர் தபன் சாஹா கூறுகிறார்.

கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் சுஸ்நாத் தாஸ், ஐஐடியின் இந்த நடவடிக்கை அரசியல் விளையாட்டு என்றும் வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்றும் கூறுகிறார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய டாக்டர் தாஸ், "பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் ஐஐடியில் உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சமூக அறிவியல், இலக்கியம் மற்றும் வரலாறு குறித்து சிறப்பு விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற கூற்றுகள் மூலம், வரலாறு குறித்த தவறான தகவல்களை அவர்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுகிறது. கல்வியை காவி நிறமாக்கும் மற்றும் வரலாற்றை திரித்துக்கூறும் முயற்சி இது. இதற்கு மத்தியில் ஆளும் கட்சியின் ஆதரவும் உள்ளது," என்று குறிப்பிட்டார்.

"எல்லா முன்னணி வரலாற்றாசிரியர்களும் பண்டைய நாகரிகத்தைப் பற்றி ஆராய்ந்த பிறகே தங்கள் முடிவுக்கு வந்தனர். ஆரியப் படையெடுப்பு ஒரு நிரூபிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அந்த மக்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா வந்தவர்கள். பலநூற்றாண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்ட உண்மைகளை, இத்தகைய காலண்டர் மூலம் நிராகரிப்பது அடிப்படையற்றது மற்றும் கேலிக்குரியது" என்றும் அவர் கூறினார்.

"இந்த கல்விக்கழகம் ஆரியர்களின் தாக்குதலை ஒரு கட்டுக்கதை என்று கூறி முழு கருத்தையும் தவறு என்று நிரூபிக்க முயல்கிறது. இதன் நோக்கம் இந்தியா முஸ்லிம்களால் தாக்கப்பட்டது, ஆரியர்களால் அல்ல என்ற கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்," என்று டாக்டர் தாஸ் குறிப்பிட்டார்.

"ஆரிய படையெடுப்பின் வரலாறு மிகவும் பழமையானது. இந்த வரலாற்றை ஒரு காலண்டரால் ஒதுக்கிவிட முடியாது," என்று முன்னாள் வரலாற்று பாட ஆசிரியர் ரஞ்சன் குமார் தாஸ் கூறுகிறார்,
கையெழுத்து பிரசாரம்
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

பட மூலாதாரம், IIT KHARAGPUR
படக்குறிப்பு,
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
ஐஐடி கரக்பூர் நாட்காட்டி

இதற்கிடையில், ஐஐடியின் முன்னாள் மாணவரான ஆஷீஷ் ரஞ்சன் இதற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

ஐஐடியின் இயக்குநருக்கு அனுப்பிய மனுவில், காலண்டரை எதிர்ப்பதற்கு ஆதரவாக சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

'தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் மனித மக்கள்தொகையின் உருவாக்கம்' என்ற ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டி, 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவுக்கு வந்ததாக எழுதியுள்ளார். பின்னர் அவர்கள் படிப்படியாக துணைக்கண்டத்திலும் பரவினர். அதன்பிறகு, கிறிஸ்துவுக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரானில் இருந்து மேலும் அதிகமானோர் வந்தனர்.

"இரானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் தொடர்பாக உலகம் முழுவதும் பொதுவான கருத்து உள்ளது. ஆனால் நாட்காட்டியின் மூலம், ஒருமித்த கருத்து இல்லாத அல்லது அதை ஆதரிப்பதற்கான ஆராய்ச்சி அல்லது சான்றுகள் இல்லாத கருத்துக்களை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று ஆஷிஷ் ரஞ்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சாரங்களால் நாட்டின் பழமையான ஐஐடியின் பிராண்ட் இமேஜ் மோசமாக பாதிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் தனக்கு தொடர்பு இல்லாத துறைகள் பற்றிய விஷயங்களில் கருத்து வெளியிட ஐஐடி கரக்பூருக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார். இதற்கான எந்தவித ஆதாரமும் அதனிடம் இல்லை.

முன்னாள் மாணவர்கள் சார்பில் ஐஐடியின் இந்த நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மனுவை இயக்குனருக்கு அனுப்பியுள்ளனர் என்று ஆஷீஷ் தெரிவிக்கிறார்.

கல்விஅமைப்பின் வாதம்
கல்விக் கூடம் - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
கல்விக் கூடம் - மாதிரிப் படம்
கல்விக் கூடம் - மாதிரிப் படம்

இன்ஸ்டிடியூட்டின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் இந்தியன் நாலெட்ஜ் சிஸ்டம்ஸின் தலைவரான பேராசிரியர் ஜெய் சென், காலண்டருக்கான கருப்பொருளையும் அதன் வடிவமைப்பையும் உருவாக்கியுள்ளார்.

நாட்காட்டி குறித்த சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், "இந்த காலண்டரின் நோக்கம் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும். இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் பாராட்டியுள்ளனர்" என்று அவர் வாதிடுகிறார்.

காலண்டரில் சர்ச்சைக்குரிய எதுவும் கூறப்படவில்லை என்று பேராசிரியர் சென் கூறுகிறார்.

"ஆரியர்களின் தாக்குதல் என்ற கட்டுக்கதையை புனைந்து இந்தியாவின் தவறான வரலாற்றை முன்வைத்த விதத்திற்கு நாட்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதன் அனைத்து 12 பக்கங்களிலும் அறிவியல் வாதங்களுடன், அவற்றிற்கு ஆதரவாக 12 ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

"காலண்டர் இந்த அளவுக்கு செய்திகளில் அடிபடும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. காலண்டர் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை இந்த முயற்சியை பாராட்டியுள்ளன. மேலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல கல்வி நிறுவனங்கள் இந்த காலண்டரின் ஒவ்வொரு பக்கம் தொடர்பாக தனித்தனி பட்டறைகளை ஏற்பாடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளன," என்று பேராசிரியர் சென் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: