Rayar A - Oneindia Tamil : டெல்லி: தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. தமிழக்தில் நீட் தேர்வு காரணமாக ஏராளமான மாணவ-மாணவிகள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட நீலகிரியில் ஒரு மாணவி தற்கொலை அரங்கேறியது.
ரிஜிஸ்டர் செய்யுங்கள் ரூ.1000 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வென்றிடுங்கள்
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?
இதனை தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது.
மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், மாநில அரசின் 85 விழுக்காட்டு இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் மாநில அரசே நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரியவந்தது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தின்அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறைமந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகின்றனர்.
திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. திமுக,அதிமுக, இடதுசாரி, விசிக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் உள்துறை அமைச்சரைசந்திக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஏராளமான மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை வைக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக