கலைஞர் செய்திகள் - லெனின் : காப்பீட்டுத் தொகைக்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொலை செய்து விபத்து என நாடகமாடிய மகன்.. ராஜஸ்தானில்
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகாம் சிங். இவர் தனது பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தார்.
இந்நிலையில், மோகாம் சிங், கோசியா என்ற பகுதியில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலிஸார் நினைத்துள்ளனர்.
பின்னர், மோகாம் சிங் உடல் இருந்த கோசியா பகுதியிலேயே அவரது மகன் ராஜேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தந்தை மோகாம் சிங் ரூ.4 லட்சத்திற்கு காப்பீட்டுத் தொகை முதலீடு செய்துள்ளார். இந்த பணத்தைப் பெறுதற்காக நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய மகன் திட்டம் போட்டுள்ளார்.
பின்னர் அவரை கோசியா பகுதியில் கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்ததுபோல் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்களை போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக