ராதா மனோகர் : கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம்
Mr Justice என்று அமெரிக்காவில் அழைப்பார்கள் .. இங்கே நாம் மை லார்ட் என்கிறோம் .. வழக்காடுபவர்கள் பிச்சை எடுப்பவர்கள் போலவும் .. தீர்ப்பை கொடுப்பவர் பிச்சை அளிப்பவர் போலவும் ஒரு ஜனநாயக நாட்டில் .. நீதிக்கு உகந்ததுதானா?
தன்வழக்கு என்று வந்தால் தானே தீர்ப்பு அளிப்பதுவும் .. அடுத்தவர் வழக்கென்று வந்தால் பெரிய சம்பிரதாயங்களை பார்ப்பதுவும் ..
சில சமயத்தில் விபத்துக்களை போல நல்ல தீர்ப்புக்கள் வருவதுண்டு .
இந்த கீழடியில் அகழாய்வை தொடரவேண்டும் என்பது கூட அப்படி ஒரு விபத்து போல வந்த நல்ல தீர்ப்பு.
உயர்பதவிகளில் இருக்கின்ற தகுதி பிராமணர்களுக்கே உண்டு என்று சொல்கின்ற நீதிபதி.. இப்போதும் நீதிமன்றத்தில் இருக்கின்றார் .உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவே இல்லை.
பிராமணன் கற்பழிப்பானா என்று கேட்ட நீதிபதியும் சில ஆண்டுகளுக்கு முன்னல் இங்கே இருந்ததுண்டு. எந்த உச்ச நீதிமன்றமும் அவரை கேள்வி கேட்கவில்லை.
சனாதனம் ஊறிப்போய்விட்ட நீதி துறையில் நாம் எவ்வாறு நியாயாமான மனித நீதியை எதிர்பார்க்க முடியும் என்ற அச்சம் இருக்கிறது.
மனித நீதி இல்லாமல் ஜனநாயகம் கிடைக்காது . ஜனநாயகம் தெய்வ நீதியால் வருவது அல்ல..
குமரியில இருந்த பாறையில் விவேகானத்தாருக்கு மண்டபம் ..
தமிழ் மண்ணில் திருக்குறளின் கருத்தை மறுத்து பேசிய விவேகானந்தருக்கு மண்டபம்.
ராமகிருஷ்ண மடத்தின் ஆர் எஸ் எஸ் ரானடே முன்னின்று ... ஊரெல்லாம் பணம் பெற்று நிறுவினார்.
நம்ம குறளுக்கு கங்கையில் இடம் தருவதாக் சொன்னார்கள் .. இப்போ எங்கே இருக்கிறது? கழிப்பிடம் இருக்கின்ற பகுதியில் வைக்கப்பட்ட அந்த வள்ளுவர் சிலையை சிறுமை படுத்தியது மட்டுமல்ல . கறுப்பாக இருக்கும் தமிழர்களோடு நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று தருண் விஜய் அறிக்கை கொடுக்கிறார்..என்னே அவர் பெருந்தன்மை? நிறத்திமிர் ...
தமிழை மோடி புகழ்வது எல்லாம் இருக்கட்டும் ..
வேத நாகரீகத்தை விட சிந்துவெளி திராவிட நாகரீகம் பழையது என்பது நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா ? அதை சொல்ல முன் வருகிறீர்களா?
மாறாக என்ன சொல்கிறீர்கள் ?
சிந்திவெளி நாகரீகம் வேத நாகரீகத்தின் சூத்திர பகுதி என்கிறீர்கள்.
சிந்துவெளியை வேத நாகரீகம் என்று மாற்ற முயற்சிக்கிறீர்கள் .
ஆரியர்கள் இங்கே வருவதற்கு முன்பே இங்கு ஒரு பெரிய நாகரீகம் இருந்திருக்கிறது.
வந்தவர்கள் நாகரீகத்தால் மேம்பட்டவர்கள் அல்ல . மிகவும் நாகரீகத்தால் மிகவும் தாழ்ந்து இருந்த ஆரியர்கள்தான் வென்றார்கள் .
பத்து ரவுடிகள் நம்மை நோக்கி வந்தால் நாம் ஓடிவிடுகிறோம் . அவன் நாகரீகத்தில் மேம்பட்டவன் என்பதற்காக அல்ல .. அவன் மிக பெரிய பொறுக்கி என்பதால்தான் ஓடிவிடுகிறோம்.
மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை அழித்தவர்கள் காட்டு மிராண்டி பார்பபேரியன்கள்.
சிந்து வெளி நாகரீகத்தை நோக்கி வந்தவர்கள் காட்டு மிராண்டிகள்.
இந்த ஆரியர்கள் செங்கல்லை அறியாதவர்கள் . வீடு கட்ட தெரியாதவர்கள் . இவர்கள் வாழ்ந்தது கூடாரங்களில் .
ஆரியர்கள் அல்லாதவர்கள் அமைத்த நகரங்களுக்கு அப்பால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் வாழ்ந்தவர்கள்.
இந்த கூடாரங்களில் உள்ளவர்களுக்கு தெரிந்த மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் நெருப்பை மூட்டுவதும் பசுவை வளர்ப்பதுவும்தான்.
பசுவையும் அதை உணவாகவும் யாகங்கள் செய்பவர்கள் .( Barbeque Party)
கால்நடை கவர்வதையே ஒரு பெரிய மதமாக கொண்டவர்கள்.
அவர்கள்தான் நமக்கு பின்னால் வந்த நாகரீகம் அற்ற காட்டுமிராண்டிகள்.
ரிக் வேத கால ஆரியர்கள் நாகரீகம் அற்றவர்கள் .
இந்த காட்டுமிராண்டிகளுக்கு முன்னால் இருந்தவர்களை பற்றி ரிக் வேதம் குறிப்பிடுகிறது :
இவர்கள் கோட்டை கொத்தளங்களோடு வாழுகிறார்கள் .
நீர்த்தடுப்பு அணைகளை வைத்திருக்கின்றரர்கள் , அந்த அணைகளை உடைக்க முடியவில்லை . ரிக் வேதம் கூறுகிறது.
இவர்களை தகர்க்க எம்மால் முடியாது எனவே இந்திரனை நோக்கி வேண்டுகிறார்கள் ..இந்திரனே இவர்களை துவம்சம் பண்ணுவாயாக ..
யார் சிறப்பாக வாழ்ந்தார்கள் .. ? யார் நகரங்களின் வாழ்ந்தார்கள் ?
ஆரியர்களுக்கு முன்னாள் இங்கே இருந்தவர்கள் நகரங்களில் வாழ்ந்தார்கள்.
நகரம் என்பது நாகரிக முதிர்ச்சியின் சின்னம்
சிந்து சம வெளி என்பது இந்தியாவின் தொன்மை நாகரீகம் என்பதை இதுகாறும் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்..
இன்று கீழடியை ஒரு சிறிய வைகை நதிக்கரையில் எப்படி ஒரு பெரிய நாகரீகம் இருந்திருக்க முடியும் என்று கேட்கிறார்கள்.
நதிகளுக்கும் கால மாற்றங்கள் உண்டு .. அன்றைய வைகை நதி இப்போது இருப்பது போல இருந்திருக்கவில்லை .
ரிக்வேதத்தில் ஆரியர்கள் தங்கள் பகைவர்கள் பற்றி எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா?
கறுப்பாக இருக்கிறார்கள் .. எடுப்பான மூக்கு அவர்களுக்கு கிடையாது . புரியாத மொழியை பேசுபவர்களாக இருக்கிறார்கள் . ஆரியர்களுக்கு புரியாத மொழி.
இது மட்டுமா ? இவர்கள் ( திராவிடர்கள் ) பெண்கள் படைவீரர்களாக இருக்கிறார்கள்... அதாவது இவர்களிடம் படை இருந்திருக்கிறது . அதில் மகளிர் அணியும் இருந்திருக்கிறது என்பதை ரிக் வேதம் ஒப்புக்கொண்டு இருக்கிறது அல்லவா?
மகளிரையும் படையில் சேர்த்த ஒரு மாபெரும் பண்பாடு இங்கே இருந்திருக்கிறது. ஆண் பெண் வேறுபாடு அங்கே இல்லை. சமுகம் என்பது இருவருக்கும் பொதுவாக இருந்திருக்கிறது .
இவர்கள் சிலை வழிபாடு செய்பவர்கள் .. ஆரியர்களுக்கு சிலை வழிபாடு இல்லை. ( இன்னைக்குத்தான் சிலையை வைத்து அரசியல் பண்றாங்க)
கோவில் கிடையாது.
அவர்களுக்கு யக்ஞம் மட்டும்தான் தெரியும் .எப்போதும் புலம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள்
ஒரு இடத்தில் வந்து கூடாரம் அமைத்து கொள்வார்கள் . நெருப்பை மூட்டுவார்கள் . பசுவை கொல்வார்கள் .யக்ஞம் தீயில் புகை வரும் .. எங்கள் இந்திரனால்தான் மழை பெய்கிறது .. மன்னன் வெற்றி பெருகிறான் என்பார்கள் .. அப்படியே கூறிக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு சென்று விடுவார்கள்.
இந்தியாவில் எங்கே பார்த்தாலும் தாய் தெய்வ வழிபாடு எச்சங்களை காணமுடியும்.
இந்த மண்ணில் பெண்களுக்கு உயர்ந்த இடம் இருப்பதை ஆரியர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
ஆரியம் அல்லாத ஒரு நாகரீகம் இங்கு இருந்திருக்கிறது அது எகிப்திய சுமேரிய நாகரீகங்களை விட பரந்த எல்லை .
எப்பொழது செம்பு கண்டு பிடிக்கப்பட்டதோ அப்போதுதான் நாகரீகங்கள் உருவானது.
கிமு நாலாயிரம் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் செம்பு கண்டு பிடிக்கப்பட்டது .
எகிப்து . சுமேரிய , கிரிட்டன் ..ஏஜியன் .. அடுத்தது சிந்து நாகரீகம் வருகிறது . மிகதொன்மையான நாகரீகம் என்பது இந்த ஐந்து நாகரீகங்கள்தான்.
இந்த ஐந்து நாகரீகங்களில் நான்கு நாகரீங்களை வளர்த்தவர்கள் வெள்ளை தோல் அல்ல .. நம்மை போன்ற நிறத்தவர்கள் .
ஆரியர்களால் பழிக்கப்பட்ட கருத்த தோல் உடையவர்கள்தான் நாகரீகங்களை உருவாக்கியவர்கள் . இந்த நாகரீகங்களை அழித்தவர்கள்தான் வெள்ளை தோல் ஆரியர்கள்.
இங்கே இருந்த கடவுளர்களை பிராமணிய படுத்தினார்கள் . அதையும் நாம் ஏற்றுக்கொண்டு ..
வடநாடு முழுவது ஆய்வு நடத்தினார்கள் .. இல்லாத ஒரு சரஸ்வதி நாகரீகத்தை தேடி இவர்கள் நடத்தின ஆய்வுகள் அதற்கு முந்திய வரலாறுகளை வெளிக்கொண்டு வந்து விட்டது .
1850 வரை இருக்கிற இந்திய வரலாற்று நூல்களில் பௌத்த இந்தியா கிடையாது . ஏனெனில் அசோகனின் கல்வெட்டுக்களை இவர்களால் படிக்க முடியாமல் இருந்தது . அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர்கள்தான் அதை படிக்க கூடிய அசோகர் பிராமி எழுத்தை கண்டு பிடித்தார்கள் .. ஜேம்ஸ் பிரின்ஸ் என்ற அறிஞர் 1936. ஆண்டு அதை படிக்க செய்தார் .
இவர்களால் மறைக்கக் பட்டிருந்த பௌத்த இந்தியா வெளியே வந்தது .
அதே போல தொல்லியல் அறிஞர் கன்னிங்ஹாம் இல்லாவிட்டால் இந்த பௌத்த தொன்மங்கள வெளியே வந்திருக்காது
அதுபோலவே பிரான்சிஸ் வைஸ் இல்லாவிட்டால் கால்டுவெல் இல்லாவிட்டால் திராவிட மொழிகள் குடும்பம் என்பதே இல்லாமல் போயிருக்கும் .
இன்றும் சொல்ல்கிறார்கள் சமஸ்கிருதத்தில் இருந்துதான் எல்லா மொழியும் வந்தது என்கிறார்கள் . அப்படியே வைத்து கொள்வதாயின் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த தமிழ் மொழியை மட்டும் எப்படி நீச மொழி என்று கூறமுடியும்?
இறுதியாக ஜோன் மார்ஷல் என்ன்பவர் கொண்டுவந்த சிந்து சமவெளி அகழாய்வு ..
இவை பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் பேசிய காணொளியில் அடியேன் அவதானித்த சில விடயங்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டு உள்ளேன் .. அவர் பேசிய எல்லாவற்றையும் சீராக அறிவதற்கு இந்த காணொளியை கேட்பது அவசியமாகும்.
இந்த குறிப்பிட்ட காணொளியை பின்னூட்டத்தில் தந்துள்ளேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக