வியாழன், 24 செப்டம்பர், 2020

கே. பி. சுந்தரம்பாள் நடித்த பக்த நந்தனார் படத்திற்கு என்ன நிகழ்ந்தது..?

A Prabhakar TheKa :  · டிகோடட் நந்தனார் படம் நெருப்பு புகல் ஜோதி மயமாதல் பக்த நந்தனார் (1935) என்ற ஒரு பழம் பெரும் திரைப்படம் கே. பி. சுந்தராம்பாள் சுமாருக்கு 19 பாடல்கள் பாடி நடித்த படம் என்று கேள்விப்பட்டு வரலாறு
அறிவோம் என்ற திட்டத்தில் தேடினேன்.
எரடி விழுந்த இடம் தண்டபானி தேசிகர் பாடி நடித்த மற்றுமொரு நந்தனார் படம் (1942). கதை சொல்ல எடுத்திருக்கும் தளமே நமக்கு பல உண்மைகளை டிகோட் (in the underlining context) செய்து பார்த்தால் விளங்கிக் கொள்ளும் படியாக இருக்கிறது. கதையில் வரும் நந்தனார், சிவனின் மீது பக்தி கொண்டு, கருப்பசாமிக்கு படையல் போடுவதையே தவறு என்று தன்னுடைய மக்களையே மனம் மாற்றி திருப்புன்கூர் சிவ ஆலயத்திற்கு கூட்டிச் செல்கிறார். அவர் ஒரு பறையர் சமூகத்தை சார்ந்தவர்.
அங்கு சிவ லிங்கத்தை வாயிலிற்கு வெளியில் நின்று தரிசிக்க முடியாத வகையில் நந்தி குறுக்கே கட்டப்பட்டிருக்கும். அப்பொழுது கிராமவாசிகள் இதற்காகத்தானா எங்களை இவ்வளவு தூரம் நடக்க விட்டு அழைத்து வந்தாய் என்று நொந்து கொள்வார்கள்.
நந்தனார் நெஞ்சுருகி இறைந்து பாடி நந்தியை நகர்த்தி வைப்பார். அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கிக் கொள்வார்கள். மற்றொரு காட்சியில், நந்தனார் தான் அடிமையாக வயல் வேலை செய்து கொடுப்பவர் என்பதால், நிலக்கிழார் ஆண்டே"யாக வாழும் ஐயரிடம் தனக்கு சிதம்பரம் சென்று சிவனை தரிசிக்க அனுமதி வேண்டும் என்று கெஞ்சுவார்.
 
ஆனா, அனுமதி எப்பொழுதும் போல 'நீட்' சூழ்ச்சியின் அடிப்படையில் வழங்கப்படும். அதாவது 40 வேலி நிலத்தையும் உழுது, பயிரிட்டு, அறுவடை செய்து வைத்து விட்டு பிறகு நீ தில்லை செல்லலாம் என்பதே அது. அதற்கு முன்னால் பறையனான உனக்கு எதற்குடா இதெல்லாம் என்பதாக பல திடுக்கிடும் பாடல் வரிகளுடன் கதை நகர்கிறது.
எனிவே, அழுதுகொண்டே நந்தனார் சோர்வோடு பாடிக்கொண்டே வரும் வழியில் சுருண்டு விழுந்து விடுகிறார். 
சிவபெருமான் தலையை கருணையோடு அசைத்து உள்ளங்கையிலிருந்து ஒளியைச் செலுத்தி பூரா நிலத்திலும் ஒரே இரவில் சாகுபடி செய்து நெற்பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கும் படி செய்து விடுவார்.
அடுத்து நந்தனார், தில்லை கிளம்பிச் செல்கிறார். இங்கேதான் பல வெர்சன் கதைகள் நமக்குக் கிடைக்கிறது. 
மேலே சொன்ன, நந்தனாருக்கான "மந்திரத்தில் மாங்காய் கொண்டு வரும்" கதைகள் பின் வரப் போகும், கீழ் ஜாதிக்காரன் கோவில் நுழைவு செய்ய எந்த ரூபத்தில் வந்தாலும், அப்படியே கொளுத்தி விடு என்ற க்ரைம் செயலை நற்செயல் ஆக்குவதற்கான முன் தயாரிப்புகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நந்தனார், சிவனைப் பார்க்க சிதம்பரம் வந்தாரா, சிவன், சில தீட்சிதர்களிடம் கனவில் தோன்றி, இந்த மாதிரி நந்தனாரை போய் அழைத்துக் கொண்டு வாங்கன்னு சொல்கிறார். 
இருந்தாலும், அழைத்து வரும் போதே அந்த நான்கு பேருக்கும் சிவனிடமே சந்தேகம் வந்து, இப்படி கீழ் ஜாதிக்காரனை நேரடியா எப்படி அழைத்துச் செல்வது, பழக்கமாகிடாதான்னு கேட்டு-
திடீரென்று ஓர் ஐடியா தோன்றுகிறது. நந்தனாரை நெருப்பில் இறக்கி புனிதப்படுத்தி பின்பு தரிசிக்க வைப்பது என்று நெருப்பில் இறங்க வைக்கிறார்கள். 
கதையின் படி நமக்குத் தெரியும், அவருக்கு சிறப்பு சக்தி இருக்கு, அந்தப் பக்கம் தகத்தாய தீட்சிதராக ஜொலித்து வெளியேறுவார்னு நம்பி இருக்கையின் முனைக்கு வந்து அமர்ந்திருப்போம். அது கதை. 
படம்.
இப்படி வம்படியா பக்தியை நம்பி சாகடிக்கப்பட்ட முறைகளுக்கு -
👉🏿நீர், நிலம், நெருப்பு புகுதல் (டிகோடட் வழியாக ➡️ குழி தோண்டி புதைப்பது➡️ஆற்றில் மூழ்க வைத்து சாகடிப்பது➡️ நெருப்பில் எரிப்பது) என்று பக்தி பரவசத்தில் கருணையோடு சொல்லப்பட்டிருக்கும்..
 
அல்லது வள்ளலாருக்கு செய்த மாதிரி ஜோதியில் கரைப்பது (டிகோடட் - நெருப்பு வைத்து எரித்து விடுவது). 
இது போன்ற உண்மையான மனிதர்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளை ஃபாண்டசி வகை முடிவுகளாக எழுதப்படும் பொழுது, பண்பூக்கம் செய்து கதை சொல்லுவது அதன் மூர்க்கத்தின் வீரியத்தை முனை முறித்து விடும் என்று சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
 
சரி, கே. பி. சுந்தரம்பாள் நடித்து வெளியான பக்த நந்தனார் அப்படிங்கிற படத்திற்கு என்ன நிகழ்ந்ததுன்னு அடுத்தப் பதிவில சொல்லுறேன்...
#Nandhanar Movie Revisited

Devanurpudur DrAnbu Selvan : எனக்கு இந்த ஐயம் படம் பார்த்த நாள் முதலாக உண்டு. வருகலாமோ ஐயா..என்ற பாடலுக்காகவும், தண்டபாணி தேசிகரின் குரலிசைக்காகவும் பல முறைகள் பார்த்ததுண்டு. 

வள்ளலாரையும் இப்படித்தான் 🔥 தீவைத்துக் கொன்றுவிட்டு, அவரை ஒளியாக மறைந்தார் என்று சொல்லிவிட்டனரோ என்றும் தோன்றும். ஆயினும், பிரிட்டிஷ் கலெக்டர் முன்பாக சித்திவளாகத்துக்குள் நுழைந்தவர் மீளவில்லை என்ற குறிப்புதான் இடறுகிறது. இது பொய்யானால், பிரிட்டிஷ் அரசும் பார்ப்பனியமும் சேர்ந்து வள்ளலாரை அழித்திருக்கலாம். தில்லைவாழ் அந்தணரால் எல்லையிலாத் தொல்லை பெற்றேன் என்று எழுதிய வள்ளலாரை விட்டுவைத்திருப்பார்களா?? 

A Prabhakar TheKa : நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது இது போன்ற காட்சிகள் திரைப்படங்களின் வழியாக, அதிரும் மணியோசைகளுக்கிடையேயும், அசைந்தாடும் விளக்குகளுனூடேயும் ஒருவர் 🔥 புகுந்து மறுமுனையில் ஒளியாக எழுந்து, கற்சிலையோடு கரைவதைப் போல காட்டும் போது ஆகா, ஒகோவென பார்த்துவிட்டு வரலாம். தவறில்லை. அதற்கான வாசிப்போ, சுயமாக சிந்திக்கும் பக்குவமோ, பழக்கமோ இல்லாததால் நடைபெறுகிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், ஏரணம் (லாஜிக்) புரிந்த காலத்தில் அதற்கான convincing factsகளை தேடிப்போனால் இன்று நாம் வந்தடைந்திருக்கும் இடத்திற்கு வந்து நிற்போம். சான்றுகளை அழிப்பதில் 🔥🔥 பெரும்பங்காற்றுகிறது என்பது இது போன்ற கதைகளின் மூலம் தெளிவாகுகிறது. மாணிக்கவாசகர் ==> நந்தனார் ==> வள்ளலார் ==> கே. பி. சுந்தரம்பாளோட பக்தி நந்தனார் திரைப்படம் வரைக்குமே கூட interestingly enough தீ உறவாடி இருக்கிறது. 

 

A Prabhakar TheKa : //ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் "நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே" என்று துக்கித்து, "இதுவும் சுவாமியுடைய அருள்தான்" என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் "நாளைக்குப் போவேன்" என்றார். இப்படியே "நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்" என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.// இந்த நைச்சியமான திரிப்பு சொற்களில் இடைவிடாத தொடரும் ஒரு கேள்வி இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் சென்று தரிசிக்க ஆசைப்பட்டவரை தில்லைக்கு மட்டும் போக விடாமல், யார், எது தடுத்தது. இறைவனுக்கு முன்னால் அனைத்து ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்றால், நான் "யோக்கியதை அற்றவன்" என்று யார் விதித்தது? அந்த சாட்சாத் சிவபெருமான் தான் இவரை தீ புகுந்து வந்து அந்தணர் போல நிரூபித்து காட்டி விட்டு உள்ளே வா என்று கூறினால், அவர் என்னய்யா கடவுள் என்று கேள்வி கேட்க தோன்றவில்லை? இந்தக் கொடுமையை மேலும் அறிய- 

 Kannan Govindaraju : கொலைக்கு ஜோதி, ஐய்க்கியம் சமாதி என்றெல்லாம் பெயர் வைப்பார்கள், அதெல்லாம் ஏன் தற்போது நடைபெறுவதில்லை தில்லைவாழ் அந்தணர் 3000 பேரை கயிலையில் இருந்து சிதம்பரத்திற்கு ஆகாய வழியில் இட்டாந்தாராம். அந்த 3000ல்  பெண்டுக யாரும் இல்லை ஞான சம்பந்தனின் புனிதம் கெடும் என்று எண்ணி அவன் திருமணத்தை ஏற்காமல் மண்டபத்தை கொளுத்தி கொன்ற பாவிகள் அன்று என்ன சொல்லி இருப்பர் ? கடவுள் அந்த திருமணத்தை ஏற்கல அக்னி பகவானை ஏவி அழித்துட்டார். உருவ வழிவாடு உருவமற்ற வழிபாடு குழப்பி  குளிர்காய்ந்தவன் ஆதிசங்கரன் அவன் எழுதியெல்லாம் பவுத்த திருட்டு 

Kathir Krishnamurthi : தர்க்கம் பண்ணி தோற்று ஓடினார்கள் ஆதி சங்கரிடம் என்றால் 'கதையை முடித்து சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டான் சனாத்தனப் பார்ப்பான்' என்றே குறியவிழ்க்க..

 Kannan Govindaraju : நந்தனாருக்கு காட்சி கொடுக்க விரும்பி இருந்தால் அதை அவன் கிராமத்தில் இருக்கும் போதே செய்திருக்கலாம், ஆனால் கோயிலுக்கு வரவழைத்து தீயில் இறக்கி... நந்தனாருக்கு நடத்திய தீயிறங்கும் சோதனையை தில்லைவாழ் அந்தணனர்களுக்கும் நடத்துங்கள் என்று வலியுறுத்ததாதவரை நந்தனார் கதை சிலாகிக்கப்படும்

கருத்துகள் இல்லை: