ஞாயிறு, 13 அக்டோபர், 2019

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889)

Sundar P : மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889)
நீதியரசர் , கொடை வள்ளல் , தமிழ் ஆர்வலர் ,கவிஞர் ,பெண்ணியம் போற்றிய முற்போக்கு சிந்தனையாளர் , எழுத்தாளர். 1878இல் பிரதாப முதலியார் சரித்திரம்
என்னும் புதினத்தை எழுதி, தமிழ் புதினஇலக்கிய
உலகின் கதவைத் திறந்தவர் வேதநாயகர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளத்தூரில் பிறந்தார் வேதநாயகர்.
இவரது பெற்றோர், சவரிமுத்துப் பிள்ளை, ஆரோக்கியமரி அம்மையார்.
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்றார் வேதநாயகம்
ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளி தியாகராசப் பிள்ளை என்பாரிடம் பயின்றார்.
பிரெஞ்சு , வடமொழியினும் புலமை பெற்றார்.
நீதிமன்ற ஆவணக் காப்பாளராக திருச்சி நீதிமன்றத்தில் 1848-ஆம் ஆண்டு பணியிலமர்ந்தார்.
பின்னர் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார்.
மாயவரம் (மாயூரம்)மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர்.
மாயூரம்நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தம்வாழ்நாளில் கவிதைகள் , கீர்த்தனைகள் .மொழிபெயர்ப்புகள்,வரலாறு , புதினங்கள் , என்று16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். .

இசையிலும் ஈடுபாடு கொண்டு வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.
தெலுங்கு , வடமொழிப் பாடல்களையே பாடிக் கொண்டிருந்த இசை அரங்குகளில் , தமிழிசை
பாடப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
200 கீர்த்தனைகள் கொண்ட "சர்வ சமய
சமரசக் கீர்த்தனைகள் " என்ற இசைப் பாடல்
நூலை எழுதி வெளியிட்டார்.
இவரது சமகாலத்தோரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளிட்டார். 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளையே ஆவார்.
தமிழகத்தில் 1876 - 1878 ஆண்டுகளில் பஞ்சம்
தலைவிரித்தாடியது. அப்போது தமது சொத்துக்களையெல்லாம் தானம் செய்து
ஏழை மக்கள் பசிப்பிணியைப் போக்கினார்..
பெண்கள் கல்வி கற்க வேண்டும் மிகுந்த அக்கறை கொண்டவர் வேதநாயகர்.
1869 இல் மாயூரத்தில் தம் சொந்தசெலவில் பெண்களுக்கெனத் தனிப்பள்ளியைத் தொடங்கி பெண்கள் கல்வி கற்க உதவினார்.
விதவை மறுமணம், குழந்தைத் திருமண ஒழிப்பு ஆகியவை குறித்து தமது படைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழே மூச்சாய் ,பேச்சாய் ,செயலாய் வாழ்ந்த மாயூரம வேதநாயகம் பிள்ளை 1889 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் தமிழுடன் கலந்தார்

கருத்துகள் இல்லை: