வெள்ளி, 18 அக்டோபர், 2019

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம்

தினமலர் :  புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ரஞ்சன்
கோகாய் பதவிக்காலம் முடிவதை அடுத்து நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது கோர்ட் பெண் பணியாளர் ஒருவர் செக்ஸ் புகார் கூறினார். ஆனால் விசாரணையில்இது பொய் புகார் என்று தெரிய வந்தது. தற்போது அவர் அயோத்தி விவகார வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2018 அக்டோபர் 3 ம் தேதி முதல் பதவி வகித்து வரும் கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதி நிறைவு பெறுகிறது. ஒரு வருடம் 5 மாத காலம் இந்நிலையில் தலைமை நீதிபதியாக எஸ். ஏ.பாப்டே என்பவரை நியமிப்பதாக ரஞ்சன் கோகாய் சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார்.

 பாப்டே சுப்ரீம் கோர்ட்டின் 47 வது நீதிபதியாவார். வரும் நவம்பர் 18 ம் தேதி பொறுப்பேற்க இருப்பதாக கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் ஒரு வருடம் 5 மாத காலம் பொறுப்பில் இருப்பார். அதாவது வரும் 2021 ஏப்ரல் மாதம் 23 ம் தேதி வரை பதவி வகிப்பார்

கருத்துகள் இல்லை: