சனி, 19 அக்டோபர், 2019

அண்ணா பல்கலை. டீன் .. ஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்


Hemavandhana |tamil.oneindia.com :  ஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான்
ஒத்துக்கலை.. அந்த ஆத்திரத்தில் எனக்கு பனிஷ்மென்ட் தந்தாரு" என்று திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நாகை மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக் கழக வளாகம் உள்ளது. இங்கு துணை பேராசிரியராக வேலை பார்ப்பவர் ஹேமா. இவருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் துரைராசன் அடிக்கடி பாலியல் தொல்லை
கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 
ஒருநாள் டீனிடம் கையெழுத்து வாங்க அவரது ரூமுக்கு ஹேமா செல்லவும், அப்போது எல்லைமீறி விட்டாராம்.. 
இதனால் அங்கிருந்து நாசூக்காக தப்பி வந்த ஹேமா, வீட்டிற்கு வந்து கணவனிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார். பிறகு டீனுக்கே போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்ணீருடன் கூறி தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.
ஆனால், அவரது கணவன் தற்கொலையை தடுத்து நிறுத்தி போலீசில் புகார் தர வற்புறுத்தி உள்ளார். 
இதன்பிறகுதான் திருக்குவளை ஸ்டேஷனில் டீன் தந்த பாலியல் தொல்லை பற்றி ஹேமா புகார் தந்தார். அப்போது, டீன் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் ஹேமா போலீசில் ஒப்படைத்துள்ளார். ஹேமாவிடம் புகாரை பெற்றுக் கொண்ட திருக்குவளை போலீசார் புகார் குறித்து பல்கலைக்கழக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
இதனிடையே, துணை பேராசிரியர் ஹேமா தந்தது பொய் புகார் என்று டீனுக்கு ஆதரவாக ஒரு துறையை சேர்ந்த மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதனால், பல்கலைக்கழகத்தில் என்னதான நடந்தது என்பது குறித்து விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
இது ஒரு புறம் இருக்க.. இந்து முன்னணி அமைப்புகள் ஒரு பக்கம் கிளம்பிவிட்டனர். கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: