புதன், 1 மே, 2019

டி.ராஜேந்தர் .. குளறுபடிகளையும் தாண்டி செயற்கரிய செய்த சாதனையாளர்

LR Jagadheesan : பெரும்பாலும் கோமாளியாக மட்டுமே இன்றைய இளம்
தலைமுறையிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இயக்குநர் டி ராஜேந்தரின் பல்வேறு அரசியல் அந்தர்பல்டிகளையும் காமெடிகளையும் தாண்டி அவரது சொந்த வாழ்க்கையில் நான்கு செயல்கள் நினைவில் கொள்ளத்தக்கவை. மதித்து பாராட்டத்தக்கவை.
1. எந்த பின்புலமும் இல்லாமல் சொந்த உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே திரைத்துறையில் நுழைந்து சாதித்த மிகப்பெரிய சினிமாத்துறை சாதனையாளன். பல்திறன் வித்தகன்.
2. இன்றைய “புர்சித்தமிழன்” உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்திரையுலகமும் பெல்டால் அமைச்சர்களை அடிப்பதாக புகழ்பெற்ற புர்சி தலைவருக்காக கர்லா கட்டைகள் சுற்றியும் அவர் காலடியில் மண்டியிட்டும் தொழுது கிடந்த கொடுங்காலத்தில் தைரியமாக சர்வாதிகார முதல்வரை எதிர்த்து அன்றைய தமிழ் சினிமாவில் நேருக்குநேர் கர்ஜித்த திரை நட்சத்திரம் டி ராஜேந்தர். அதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் தேவைப்பட்ட காலம் “புர்சி தலைவர்” ஆட்சிக்காலம்.

3. தன் சொந்த வாழ்வில் உஷாவை திருமணம் செய்து அவருக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தவர்.
4. இறுதியில் தன் மகன் மதம் மாறி திருமணம் செய்துகொள்வதை ஆதரித்து வாழ்த்துக்கூறி ஆசீர்வதித்திருக்கிறார். அதற்கெல்லாம் மிகப்பெரிய பரந்த மனம் தேவை.
அதை அவர் செயலில் செய்துகாட்டியிருக்கிறார்.
செயற்கரிய செயல்களான இந்த நான்குக்காக டி ராஜேந்தரின் மற்ற எல்லாவிதமான அந்தர்பல்டிகளையும் அர்த்தமற்ற உளறல்களையும் எளிதில் புறந்தள்ளலாம்.

கருத்துகள் இல்லை: