திங்கள், 29 ஏப்ரல், 2019

சென்னையில் 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர் .. வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.

The underground water level go downstairs in Chennai..People are afraid tamil.oneindia.com - NeelakandanS : சென்னை: நாடு முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை கலங்க வைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பொய்த்த மழையின் காரணமாக, நடப்பாண்டில் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் என்றில்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே நிலை தான். இதுவரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை என கூறிய சென்னை புறநகர் பகுதிகளில் கூட, தற்போது சிறிது சிறிதாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட துவங்கியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகரில் நீரைப் பெற 900 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியுள்ளது என தொழிலாளர்கள் கூறியுள்ளனர். புறநகர் பகுதியிலேயே இந்த நிலை என்றால் சென்னை நகரப் பகுதியை பற்றி சொல்லவா வேண்டும் நகரின் பல முக்கிய பகுதிகளில் நீர்மட்டம் சுமார் 800 அடி ஆழம் வரை கீழிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


குரோம்பேட்டை, பல்லாவரம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரானது 800 அடி ஆழத்திலும், அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் 600 முதல் 700 அடி ஆழத்திலுமே நீர் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் 500 அடியிலும், திருவொற்றியூர், கே.கே.நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் 400 அடியிலும், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் 300 முதல் 400 அடி ஆழத்திலும் நிலத்தடி நீர் கிடைக்கிறது.
கடலோரப் பகுதிகளான ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையார், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் தரப்பில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: