வேலூர் மாவட்டம், தேவரிஷிக் குப்பத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் அருந்ததியத் தெருவின் முதல் பட்டதாரி. இந்நிலையில் சமீபத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை தனது சமுதாய மக்களுடன் கொண்டாடியிருக்கிறார் திருமூர்த்தி. இதனைக் கண்டு கோபமடைந்த பறையர் சமூகத்தைச் சேர்ந்த முருகன் என்பதுவரது தலைமையிலான கும்பல், "சக்கிலிப் பயலே, எவ்வளவு தைரியம் இருந்தால், என்னைக் கேட்காமல் அம்பேத்கர் பிறந்தநாளன்று விழா நடத்திருப்பாய்?" என்று திரிமூர்த்தியையும், அவரது தாயையும், அவரது தம்பியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேபோல கடந்த ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளைத் திருநாவுக்கரசர் தனது சமூக மக்களோடு கொண்டாடியதற்குப் பறையர் சமுகத்தைச் சேர்ந்த முருகன் திருமூர்த்தியை பொய் வழக்குப் போட்டு அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக