
காஷ்மீர் விகாரத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன் வந்த நிலையில் இந்தியா நிராகரித்துவிட்டது. இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் தொலை பேசி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
30 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது./
இதில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் சில தலைவர்கள் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுகின்றனர். இது அமைதிக்கு உகந்தது அல்ல.இதனை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும், இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பயங்கரவாதம் மற்றும் வறுமையை அகற்றுவது இதில் ஒன்றிணைந்து பயணிப்போம் இவ்வாறு பிரதமர் மோடி டிரம்ப்பிடம் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாக். பிரதமர் இம்ரான்கான் , டிரம்ப்பிடம் தொலை பேசியில் பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக பாக். எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி டிரம்ப்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக