திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ நகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து தினத்தந்தி :  ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந்தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தது. காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.<
வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் செல்போன் தொடர்பு  சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.<

கருத்துகள் இல்லை: