செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

சிறகொடிந்த காதலியைப் பார்க்க 5000 மைல்கள் தாண்டி வரும் நீர்ப்பறவை! - குரோசியாவில் ஒரு எபிக் காதல்கதை

Rescued Stork Malena  and Vokic Rescued Stork Malena with Klepetanvikatan.com - அஸ்வினி.ச : மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக் கொண்டார். Rescued Stork Malena with Klepetan. எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம்.
< குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வோகிக். வேட்டைக்காரர்களின் குண்டுகள் அந்தப் பறவையின் சிறகுகளில் ஆழமாகத் துளைத்திருந்தது. எனவே, அந்தப் பறவையால் இனி பறக்க முடியாது. பறவையின் காயத்துக்கு மருந்து வைத்த வோகிக், அதைப் பறவைகள் மீட்பு குழுவிடம் கொடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால், பறக்க முடியாத நிலையில் இருக்கும் அந்த நாரையைக் கொடுக்க வோகிக்கு மனம் வரவில்லை. தன் வீட்டிலேயே வைத்து வளர்க்க முடிவெடுத்தார். அந்த நாரைக்கு மலேனா என்று பெயர் வைத்தார். தன் வீட்டின் கூரையின் மீது இரண்டு விதமான கூடுகள் அமைத்தார். ஒன்று கோடைக்காலத்துக்கு மற்றொன்று பனிக்காலத்துக்கு. இப்படி தான் மலேனா வோகிக்கின் வாழ்வில் வந்தது.



மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக்கொண்டார். 10 ஆண்டுகள் இப்படியாகக் கழிந்தன. ஒரு நாள் காலை வோகிக் தன் வீட்டின் கூரையின் மீது வேறொரு நாரையைப் பார்த்தார். அந்த நாரை தொடர்ந்து வந்து வந்து செல்வதைப் பார்த்த வோகிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மலேனாவை நோக்கி காதல் அம்புகள் விட்டுக்கொண்டிருந்த அந்த நாரைக்கும் மீன்கள் வைத்தார். சில நாள்கள் ஓகே சொல்லாமல் அலைக்கழித்த மலேனா, பின்னர் அந்த நாரையை தன் கூட்டுக்குள் அனுமதித்தது. வோகிக்கு தாங்க முடியாதா சந்தோஷம். பறக்க முடியாத தன் மலேனாவுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.





 Malena with Klepetan





Malena with Klepetan
மலேனாவுடன் காதல் கொண்ட அந்த நாரைக்கு க்லெப்டன் என்று பேர் வைத்தார். க்லெப்டன் திடீரென ஒருநாள் மலேனாவை விட்டு எங்கோ சென்றுவிட்டது. வோகிக் மனமுடைந்துப் போனார். ஆனால், மலேனா எந்த வித தவிப்புமின்றி இருந்தது. இப்படியாக சில காலம் கடந்தது. பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. மலேனாவின் கூட்டில் இருந்து கீச் கீச் ஒலி வழக்கத்தைவிட உற்சாகமாகக் கேட்டது. க்லெப்டன் இஸ் பேக். ஆம் க்லெப்டன் கூடுத் திரும்பிவிட்டது. அப்போதுதான் வோகிக் புரிந்துகொண்டார். பனிக்காலம் முழுவதும் க்லெப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிடும். வெயில் காலம் தொடங்கியதும் தன் அன்பு காதலி மலேனாவின் கூடுக்கு வந்துவிடும்.






ஒவ்வொரு முறையும் கோடைக்காலம் தொடங்கியதும், க்லெப்டன் வரும் வரை வோகிக் பதற்றத்துடனேயே இருப்பார். காரணம், 5,000 மைல்கள் தாண்டி வரும் க்லெப்டன் வழியில் வேடர்களின் குண்டுகளுக்கு இறையாகிவிடக் கூடாது என்ற அச்சம். ஒரு கோடையின்போது வேறு ஏதோ ஆண் நாரை மலேனாவின் கூட்டுக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான் கோவத்தில் மலேனா தன் கூட்டுக்குள் இருந்த அத்தனை உணவையும் எட்டி உதைத்து நாசம் செய்து அந்த நாரையை துரத்திவிட்டது.





 Malena  and Vokic





Malena and Vokic
சில நாள்களுக்கு பின் க்லெப்டன் மீண்டும் வந்த பின்புதான் மலேனா இயல்பு நிலைக்குத் திரும்பியது. இவர்களின் ரியூனியனை பார்க்கவே ஒவ்வொரு கோடைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை காதலர்கள் வோகிக்கின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். 15 வருட காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இதுவரை 62 குஞ்சிகளை ஈன்றெடுத்துள்ளது மலேனா. ஒவ்வொரு குஞ்சும் சற்று வளர்ந்தவுடன் சுதந்திரமாக வானத்தில் பறக்க கிளம்பிவிடும். இன்றையளவில் மலேனாவும் க்லெப்டனும் குரோசியாவில் செலிபிரிட்டி Couple. இவர்களை பற்றிய அப்டேட்ஸ்க்காகவே வோகிக்கை பலர் முகநூலில் பின் தொடர்கின்றனர்.











 Malena with Klepetan





Malena with Klepetan
பறக்க முடியாத காதலியைப் பார்க்க கடந்த 15 ஆண்டுகளாக, தன் உயிரைப் பணயம் வைத்து 5,000 மைல்கள் தாண்டி வருகிறது ஒரு பறவை. காதலால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது.

கருத்துகள் இல்லை: