புதன், 21 ஆகஸ்ட், 2019

அமித் ஷாவின் ஷேரபுதீன் தம்பதிகள் கொலை வழக்கு .. பழிவாங்கப்படும் சிதம்பரம் ... வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?

இது முன்னாள் உள்துறை அமைச்சர் மீது இந்நாள் உள்துறை அமைச்சரின் கணக்கு தீர்க்கும் படலம். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கும்போதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அன்றைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீது ஷொரபுதீன், அவரது மனைவி கவுசர் பி போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. 2010 ஜூலை மாதம் அமித் ஷா மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியை இழந்த அமித் ஷா, காந்தி நகர் சிபிஐ ஆபீசில் சரண்டர் ஆனார். அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்? மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நேற்று (ஆகஸ்டு 20) நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிபிஐ, அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சென்றனர். அங்கே அவர் இல்லாததால் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்டு 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தின் ஜோர் பக் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் இன்று காலையும் ப.சிதம்பரம் அங்கே இல்லை. இன்று காலை சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவின் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். அதனால் முன் ஜாமீன் தொடர்பான சிக்கல் தொடர்கிறது.
இந்நிலையில் டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, “இது முன்னாள் உள்துறை அமைச்சர் மீது இந்நாள் உள்துறை அமைச்சரின் கணக்கு தீர்க்கும் படலம். ப.சிதம்பரம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக 2008 நவம்பர் முதல் 2012 ஜூலை வரை இருந்தார்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கும்போதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அன்றைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீது ஷொரபுதீன், அவரது மனைவி கவுசர் பி போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. 2010 ஜூலை மாதம் அமித் ஷா மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியை இழந்த அமித் ஷா, காந்தி நகர் சிபிஐ ஆபீசில் சரண்டர் ஆனார். அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இப்போது அமித் ஷா உள்துறை அமைச்சர். அன்று அமித் ஷா கைது செய்யப்பட்டபோது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐ என் எக்ஸ் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதில் அமித் ஷா தீவிரமாக இருக்கிறார். அதனால்தான் நேற்று இரவு, இன்று காலை என்று சிபிஐ சிதம்பரம் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஆனால் நேற்று இரவு சிதம்பரத்தை சிபிஐயால் நெருங்க முடியவில்லை. காரணம் சிதம்பரம் டெல்லியில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். ஒரு வேளை சிதம்பரம் தனக்கிருக்கும் வெளிநாட்டு செல்வாக்கினை வைத்து ஏராளமான வெளிநாட்டு தூதரக நண்பர்கள் மூலமாக ஏதேனும் வெளிநாட்டு தூதரகத்தில் இருப்பாரோ என்றும் சிபிஐ நேற்று கருதியது. அதன் அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் சாலைகளும் ரகசிய கண்காணிப்பில் இருந்தன. ஆனாலும் சிதம்பரம் நேற்று இரவு முதல் எங்கே போனார் என்பது அமித் ஷாவுக்கே அதிர்ச்சியை அளித்திருக்கிறது” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: