திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ராஜ்நாத் சிங் : இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்
தினத்தந்தி : இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசு நீக்கியது. இதனை எதிர்க்கும் பாகிஸ்தான் சர்வதேச பிரச்சனையாக சீனாவின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு பலன் ஏமாற்றமே. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா. விரும்பவில்லை. மாறாக பாகிஸ்தானும், இந்தியாவும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையென்பது பயங்கரவாதத்தை தடுத்தால் மட்டுமே என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதற்கிடையே பேச்சுவார்த்தையென பாகிஸ்தான் கூவுகிறது.


இந்நிலையில் இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துமட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி விவாதிக்க மட்டுமே இந்தியா ஆர்வமாக உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத், “370 வது பிரிவு ஜம்மு காஷ்மீரில் ரத்து செய்யப்பட்டது, அதன் வளர்ச்சிக்காகவே.  நமது அண்டை நாடு சர்வதேச சமூகத்தின் கதவுகளை தட்டுகிறது, இந்தியா தவறு செய்துள்ளது என்று கூறுகிறது. பயங்கரவாதத்தி

கருத்துகள் இல்லை: