வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரத்திற்கு 4 நாட்கள் சி பி ஐ காவல் .... 26 ஆம் தேதி வரை சி பி ஐ காவலில் இருப்பார் பிந்திய செய்தி

நக்கீரன் : ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி! பா. சந்தோஷ் 2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ப.சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ எழுப்பியதாகவும், அந்த கேள்விகளில் 6- க்கு மட்டும் ப.சிதம்பரம் பதிலளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மதியம் 03.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்

 nakkheeran.in -- பா. சந்தோஷ் : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மதியம் 03.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி வாதிட்டனர். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ உறுதியாக இருப்பதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதிட்டனர். இந்நிலையில் நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்குமா? அல்லது நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க அனுமதிக்குமா என்பது, இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்

கருத்துகள் இல்லை: