


இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஆட்டோமொபைல் துறைக்கான சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
வாகனங்களுக்கான பதிவுகட்டண நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020 வரை நிறுத்தப்படுகிறது. இதனால் இரண்டாவது முறை ரிஜிஸ்டர் செய்ய பணம் கொடுக்க வேண்டும்.
; 2020 மார்ச் வரை வாங்கப்படும் பிஎஸ்4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். வானங்களை அதிகமாக வாங்குவதற்கு வசதியாக வாகன கடன் வட்டி குறைக்கப்படும். பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்க வேண்டும்.< பழைய வாகனங்களை அரசு கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் வருவாய் இழப்பு சரி செய்யப்படும். முதலீட்டாளர்களின் நலன்தான் முக்கியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.< அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தடை தற்போது நீக்கப்படும். அரசு நிறுவனங்கள், அமைப்புகள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி வழங்கப்படும். இந்திய பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக