வியாழன், 31 மே, 2018

10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

tamilthehindu :கைரானா தொகுதியில் வென்ற ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் < மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா  படம்: ஏஎன்ஐ நான்கு மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெறுமா அல்லது தொடர்ந்து 3-வது தொகுதியை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்- உ.பி.யில் சமாஜ்வாதி; கர்நாடாகா, மேகாலயாவில் காங்கிரஸ்; கேரளாவில் சிபிஎம்  இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி முழு விவரம் - ஒரு பார்வை

4 மக்களவை தொகுதிகள்
1) கைரானா: உ.பி.யில் உள்ள கைரானா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
2)பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் பாஜக எளிதில் வென்றது.

3) பண்டாரா -கோண்டியா:  மகாராஷ்டிராவில் பண்டாரா - கோண்டியா மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு மற்ற கட்சிகள் தேசியவாத காங்கிரஸூக்கு ஆதரவளித்தன. இதனால் ஏற்கெனவே வென்ற இந்த தொகுதியில் பாஜக வீழ்ந்தது.
4) நாகாலாந்து மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் முன்னதாக வென்ற நாகா மக்கள் முன்னணி பின் தங்கியுள்ளது
10 சட்டப்பேரவை தொகுதிகள்
1) நூர்பூர்: உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2) ஜோகிஹாட்: பீகார் மாநிலம் ஜோகிஹாட் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
3) ராஜேஸ்வரி நகர்: கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 41162 ஆயிரம் வாக்குகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
4) அம்பட்டி: மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.
5) செங்கனூர்: கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார்.
6) மகேஷ்தாலா: மேற்குவங்க மாநிலம், மகேஷ்தாலா தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
7) தாரலி: உத்தராகண்ட் மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாஜக 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
8) ஷாகோட்:  பஞ்சாப் மாநிலம் ஷாகோட் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி அகாலிதளம் கட்சியின் கோட்டையாக இருந்தபோதிலும், அங்கு காங்கிரஸ்  20,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
9) கோமியா:  ஜார்க்கண்ட் மாநிலம் கோமியா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பபிதா தேவி வென்றுள்ளார்.
10) சில்லி: ஜார்கண்ட் மாநிலம் சில்லி  சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சீமா தேவி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் ஏற்கெனவே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வசமே உள்ளது.
இதைத் தவிர மகாராஷ்டிரா மாநிலம் பாலுஸ் கடேகான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி வென்றுள்ளார்.  
31.05.2018 | 04:50 PM
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலின் முடிவுகள், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு...
31.05.2018 | 04:25 PM
கைரானா மக்களவை தொகுதியில் பாஜக படுதோல்வி: எதிர்கட்சிகள் கூட்டணி அபார வெற்றி
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கைரானா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார்.
உ.பி. கைரானா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கினார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இதனால் இந்த தொகுதி பாஜகவுக்கு கடும் சவலாக விளங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ராஷ்ட்ரிய லோக்தள் சார்பில் போட்டியிட்ட தபசம் ஹசன் 55,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
31.05.2018 | 04:06 PM
சோதனைக் கூடத்திலேயே பாஜக தோல்வி - அகிலேஷ் யாதவ் கடும் சாடல்

 இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உ.பி.யில் பாஜக வீழ்த்தப்பட்டதன் மூலம், அக்கட்சியின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், அனைத்து எதிர்கட்சிகளின் ஒன்றுபட்ட முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ‘‘ஜாதிக்கூட்டலின் சோதனைக்கூடத்திலேயே பாஜக தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் உ.பி. மக்கள் அமைதியையும், மனிதநேயத்தையுமே விரும்புகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் மோடியின் சர்வாதிகார, கொடூர ஆட்சிக்கு மக்கள் முடிவு தயாராகி விட்டார்கள்’’ எனக் கூறியுள்ளார்.
மேகலாயாவில் காங்கிரஸ் வெற்றி
மேகாலயாவில் காங்கிரஸ் வெற்றி: தனிப்பெரும் கட்சியானதால் கர்நாடக பாஜக போல் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பு
31.05.2018 | 03:40 PM
பீகாரில் லாலு கட்சி அமோக வெற்றி; பாஜக-நிதிஷ் கூட்டணி தோற்றது
பீகாரில், ஜோகிஹத் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. லாலுவின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி, சந்தர்ப்பவாதம் தோற்றது என்று லாலுவின் மகன் தேஜஸ்வி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
31.05.2018 | 03:25 PM
பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி
பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொகுதி ஏற்கெனவே பாஜக வசம் இருந்த தொகுதி. இங்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் வாகாவை வீழ்த்தி பாஜக வேட்பாளர் ராஜேந்திர கவித் வெற்றி பெற்றுள்ளார்.

31.05.2018 | 02:45 PM
ஒன்றுபட்ட எதிர்கட்சிகள்

 நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

31.05.2018 | 01:46 PM
உ.பி.யில் சமாஜ்வாதி; கர்நாடாகாவில் காங்கிரஸ்
உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரால் தொட முடியாத அளவு முன்னிலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளரை விட, தபசம் ஹசன் 36,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாததளம் வெற்றி
பீகார் மாநிலத்தின் ஜோகிஹாத் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி  பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி
கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் என். முனிரத்னா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 41162 ஆயிரம் வாக்குகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி


சாஜி செரியன், செங்கனூர் மார்க்சிஸ்ட் வேட்பாளர்
 கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார்.

கருத்துகள் இல்லை: