வியாழன், 31 மே, 2018

கஞ்சா வியாபரத்தை தட்டி கேட்டதால் கொல்லப்பட்டார்கள்?

அகமுடையார் என்ற தமிழர் , பள்ளர் என்ற தமிழரை கீழ்சாதி என்று செய்த படுகொலையை அம்பலபடுத்த தயங்கும் முற்போக்குகள், அந்த கொலையை செய்தவனை விட சாதிவெறி பிடித்தவர்கள்
thozhar ? ஓவியா
//சிவகெங்கை பகுதியில் கஞ்சா விற்று வந்த பிற்படுத்தப்பட்ட சாதியைத் சேர்ந்த அல்லது சூத்திர சாதியைச் சேர்ந்தவர்களை தட்டிக் கேட்டதற்காக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களை வெட்டியிருக்கிறார்கள் அதில் இரு உயிர்கள் பலியாகி விட்டன என்று செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் எந்த நாளிதழிலும் விரிவான தகவல்கள் இல்லை. எனவே இதனையே நம்பத்தகுந்த செய்தியாகக் கொண்டு சில விசயங்களை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். முதலாவதாக கஞ்சா விற்பதை எதிர்த்து தகராறு செய்தது என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் அதனைச் செய்தார்கள் என்பது அவர்களின் பெருமைக்குரிய செயலாகும். அது ஒரு உண்மையான சமுதாயப் போராட்டமேயாகும். அதில ஈடுபட்ட பெருமையை முன்னுக்கு நிறுத்தாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் கொலை செய்து விட்டார்கள் என்று நம் நண்பர்கள் எழுதுகிறார்கள். இது தவறு என்பதாக நான் உணர்கிறேன். ஒரு பிரச்சனையின் உண்மைத் தன்மைகளை நாம் வெளிக் கொணர வேண்டும். எழுத்து என்பது அற்புதமான செயல்பாடு. அதன் அருமை உணர்ந்து பயனபடுத்த வேண்டும். தயவுசெய்து இப்படி சொன்னதற்காக பொங்காதீர்கள். இரண்டாவது கஞ்சா விற்பவன் அதனை யார் தடுத்தாலும் இதே வன்முறையை கையாளவே செய்வான்.
 அது பொண்டாட்டி பிள்ளையாக இருந்தால் கூட செய்வான். எனவே சாதி இங்கு அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது.


ஆனால் அவனது குணத்தையும் செயலையும் சாதி மட்டும் தீர்மானிக்கவில்லை. அவன் செய்யும் தொழிலம் தீர்மானித்திருக்கிறது. இந்த உண்மையை மொத்தமாக இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். சரி. இந்த இரண்டு தவறுகளும் ஏன் நடக்கின்றன என்று பார்த்தால் அவர்களின் அடுத்த குற்றச் சாட்டில் அதற்கு பதில் இருக்கிறது. தமிழன் என்று சொன்னீர்களே என்கிறார்கள். நீட்டை எதிர்க்கும் போது காவிரிப் பிரச்சனையில்… தமிழன் என்று சொன்னீர்களே என்று அவர்கள் பட்டியல் நீள்கிறது. எவனோ கஞ்சா விற்கிறவன் செய்த கொலைக்கு நீட் எதிர்ப்பு போராளிகளும் காவிரி உரிமைப் போராட்டக் காரர்களும் உங்கள் முன் குற்றவாளிக் கூண்டில் ஏறி பதில் சொல்ல வேண்டுமா…? உங்கள் உண்மையான நோக்கம்தான் என்ன…. ? நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இனம் நாடு நலியும் போது அதில் அதிகமாகப் பாதிக்கப் படுவது அங்கிருக்கும் விளிம்பு நிலை மக்களாகதான் இருப்பார்கள். ஈழத்தில் முள்வேலிக்குள் மாட்டியது யார்-? காவிரிப் படுகையில் நலிந்து மடிந்து கொண்டிருக்கும் மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப் பட்ட மக்களே. நீட் தேர்வு நாளை முதலில் அப்புறப் படுத்தப் போவது நமது கிராமங்களில் வாழும் தாழ்த்தப் பட்ட மக்களையே. படித்து இன்று நல்ல வேலையிலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அனுபவிக்கும் வசதியை இன்னும் பெறாத மக்களை மனதில் நிறுத்தி நீட் தேர்வு பற்றி யோசித்து பாருங்கள். சிவகெங்கையில் சாதிப் பேரைச் சொல்லி தாக்கும் போது சாதியாக பார்க்கிறோம். இந்தியாவில் தமிழர்களாக பாதிக்கப் படும்போது தமிழர் என்கின்ற பேரில் திரள வேண்டும் என்கிறோம். அதற்கு மேல் அந்த தமிழர் என்கின்ற வார்த்தையை வேறெதற்காகவும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியமில்லை. இது புரிந்தால் நல்லது. புரியாவிட்டால் நீங்கள் தமிழர் என்றே சொல்லிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சாதியை ஒழிக்க எந்த வழி தெரியுமோ அந்த வழியில் நீங்கள் வேலை செய்யுங்கள். அநாவசியமாக நீட்டை எதிர்ப்பவர்களை காவிரிக்காக போராடுகிறவர்களை தன் நிலத்துக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை வம்புக்கிழுக்காதீர்கள். மீண்டும் மீண்டும் சாதியை உருவாக்கியவன் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறான்//

கருத்துகள் இல்லை: