


இதற்கிடையே, ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “ரபேல் விமானத்தின் விலை உள்பட அனைத்து விவகாரங்களும் வெளிப்படையானது என பாதுகாப்பு மந்திரி முன்னர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என அதனை மறைக்கிறார்” என ராகுல் காந்தி கூறினார். மேலும், “நான் பிரதமரை மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன். ரபேல் விமானத்தின் விலை என்ன?, அதன் பாதுகாப்பு குறித்து கேபினட் கமிட்டியிடம் ஆலோசிக்கப்பட்டதா?, இந்த ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?” என ராகுல் காந்தி கேட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக