ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

கூர்மையடைந்த மனித அறிவு மத நம்பிக்கைகளால் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது ,, Independent, UK

Anna Mahizhnan : நான் நேற்று பகிர்ந்து கொண்ட “Human intelligence 'peaked thousands of years ago and we've been on an intellectual and emotional decline ever since' என்ற இங்கிலந்தின் முன்னணி ஆங்கில செய்தித் தாள் Independent, UK வெளியிட்ட கட்டுரையைத் தமிழில் தருமாறு சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அதனால், அதனை இயன்ற அளவில், சுருக்கமாக, தமிழில் எழுதியுள்ளேன்.
மனிதர்களின் அறிவு பல்லயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூர்மையடைந்து விட்டது. ஆனால், அதற்குப் பின் அந்த புத்திக் கூர்மை, மத நம்பிக்கைகளால் தொடர்ந்து மழுங்கடிக்கப் பட்டு வருகிறது என்ற அறிவியல் ஆய்வு முடிவை, இங்கிலந்தின் முன்னணி ஆங்கில செய்தித் தாள் ‘இன்டிபெண்டென்ட்’ வெளியிட்டுள்ளது.
ஆய்வு விவரம்:
கடவுள், மதம் மற்றும் மூட நம்பிக்கைகள் அகியவற்றின் அடிப்படியில் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
(1) கடவுள், மத நம்பிக்கையாளர்கள் (ஆத்திகர்கள்): Religious people. எல்லாம் அவன் செயலே, அவனன்றி அணுவும் அசையாது என்று நம்புபவர்கள். மத நம்பிக்கையின் பாற்பட்ட உள்ளுணர்வின் அடிப்படியில் (intuition) செயல் படுபவர்கள். கடவுள், புராணம், சோதிடம் உள்ளிட்ட எல்லா மூட நம்பிக்கைகளயும் முழுமையாக நம்புபவர்கள்.

(2) கடவுளை நம்ப மறுப்பவர்கள்: Agnostists. கடவுள் இருக்கின்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே கடவுள் இருக்கின்றார் என்பதை நம்ப மாட்டோம் என்பவர்கள்.
(3) கடவுள் மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்): Atheists. கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்பவர்கள். மத, மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள். (ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நாத்திகர்கள் என்று எழுத்து பூர்வமாக அறிவித்தவர்கள்).
இந்த மூன்று பிரிவைச் சேர்ந்த 63,000 பேரிடம், இங்கிலந்தின் முன்னணி ஆங்கில செய்தித் தாளான, ‘இன்டிபெண்டென்ட்’ ஒரு அறிவியல் ஆய்வை நடத்தியது. அவ்வாய்வில், 12 வகையான, மூளைத்திறன் (Cognitive tasks) சோதனைகள் நடத்தப்பட்டன.
அந்த ஆய்வின் முடிவுகள்:
1. எல்லா அறிவுத்திறன், மூளைத்திறன் சோதனைகளிலும் நாத்திகர்கள் மிகத் திறமையானவர்களாக, முதலிடத்தில் இருக்கிறார்கள்.
2. நாத்திகர்களுக்கு அடுத்த நிலையில் கடவுளைச் சந்தேகிக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.
3. இந்த அறிவுத்திறன் சோதனையின் கீழ் நிலையில், மூன்றாம் இடத்தில் கடவுள் நம்பிக்கையாளர்களும், மதப் பற்றாளர்களும் இருக்கிறார்கள்.
மத நம்பிக்கையாளைர்கள், தங்கள் உள்ளுணர்வைத்தான் பெரிதும் நம்பினார்களே ஒழிய தங்கள் அறிவை நம்ப வில்லை. தங்கள் மூளையைப் பயன் படுத்த வில்லை.
அவர்களுடைய செயலுக்கு எடுத்துக்காட்டாக ஒரு சோதனையையும் ‘இண்டிபெண்டெண்ட்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
“நீலம்” என்ற சொல் ஒரு பெட்டியிலும், நீல வண்ணத்தில் “நீலம்” என்ற சொல் மற்றொரு பெட்டியிலும் இருக்கும். சில நேரங்களில் “நீலம்” என்ற சொல் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
“நீலம்” என்ற சொல் அதற்கடுத்த பெட்டியில் “நீலம்” என்று நீல வண்ணத்திலேயே எழுதப் பட்டுள்ளதா அல்லது வேறு வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரியாகச் சொல்ல வேண்டும்.
இரண்டும் ஒன்றாக இருந்தால் ‘சரி’ என்றும் ஒன்றாக இல்லா விட்டால் ‘தவறு’ என்றும் குறிப்பிட வேண்டும். இதுதான் அந்த சோதனை. அந்த சோதனையைக் கீழே படமாகக் காட்டியுள்ளேன்.
இந்தச் சோதனையில் மத வாதிகள், தங்களுடைய அறிவைப் பயன்படுத்தாமல், உள்ளுணைர்வைக் கொண்டு ‘இதுவாகத்தான் இருக்கும்” என்று முடிவு செய்து பல தவறு செய்துள்ளார்கள் என்று ‘இன்டிபெண்டென்ட்’ ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதாவது, எதையும் ஆராய்ந்து பார்க்காமல், கண்மூடித் தனமாக முடிவெடுப்பதில், மத நம்பிக்கையாளர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். என்று ‘இன்டிபென்டெண்ட்’ குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலக் கட்டுரையை http://www.independent.co.uk/…/athiests-religious-people-in… என்ற இணைப்பில் காண்க.

கருத்துகள் இல்லை: