ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

தெலுங்கு தேசத்திடம் பாஜக கெஞ்சல் ... கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் அவசரப்பட்டு விடவேண்டாம்

“கடினமான முடிவை எடுக்காதீர்கள்,” என கடைசி நேரத்தில் சந்திரபாபு நாயுடுவிடம் அமித்ஷா தொலைபேசியில் பேசிஉள்ளார். தினதந்தி: புதுடெல்லி/ விஜயவாடா,.கூட்டணி தப்பியது! “கடினமான முடிவை எடுக்காதீர்கள்” கடைசி நேரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா அழைப்பு" குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே பாரதீய ஜனதா வெற்றி பெற்ற போது ஆந்திர பிரதேசத்தில் அக்கட்சியினர் எழுப்பிய கோஷமானது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தனியாகவே தேர்தலை சந்திப்போம் என பாரதீய ஜனதாவினர் பேசியதும் இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் தொடங்கிவிட்டது எனவும்  செய்திகள் வெளியாகியது. இதற்கிடையே பாரதீய ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனா வெளியேறுவதாக அறித்தது. இதனையடுத்து தென் இந்தியாவில் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசமும் விலகலாம் என கேள்வி எழுந்தது.
 ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 2019-ல் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் முதல்கட்சியாக தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது என செய்திகள் வெளியாகியது

சமீபத்தில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், “நாங்கள் நட்பு தர்மத்தை பாரதீய ஜனதாவுடன் பின்பற்றி வருகிறோம், பாரதீய ஜனதா கூட்டணியை தொடர விரும்பவில்லை என்றால் நாங்கள் தன்னிச்சையாக செல்வோம்,” என்றார். இதனையடுத்து விரிசல் அதிகமானது வெளியே தெரியவந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மற்றும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ள ஆந்திராவிற்கும் எந்தஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. 


ஆந்திரப் பிரதேசத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம் (போலவரம் திட்டம்), தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி மற்றும் ஆந்திர பிரதேசத்தை கட்டமைப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் அதித நம்பிக்கையுடன் பட்ஜெட்டை எதிர்பார்த்தது. ஆனால் ஒன்றும் கிடையாது என பட்ஜெட் வாசிப்பில் தெரியவந்தது. இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் தங்களுடைய கோபத்தை வெளியே தெரிவிக்க ஆரம்பித்தனர். கட்சியின் தலைமைக்கு கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என வலியுறுத்தினர்.

 இதனையடுத்து கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் விலகுகிறது என தகவல்கள் வெளியாக தொடங்கியது.

பட்ஜெட்டில் ஆந்திர பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் கூட்டம் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாகவும் தகவல் வெளியாகியது. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகல் அறிவிப்பை சந்திரபாபு நாயுடு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்வது என்ற அறிவிப்பு தெளிவற்ற நிலையில் வெளியாகி உள்ளது.

தென் இந்தியாவில் தெலுங்கு தேசம் பாரதீய ஜனதாவின் பெரிய கூட்டணி கட்சியாக உள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணி தொடர்பாக மறுஆய்வு செய்யவிருந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா சந்திரபாபு நாயுடுவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து “கடினமான முடிவை எடுக்க வேண்டாம்,” என கேட்டுக்கொண்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பான முடிவை நிறுத்தியது, கூட்டணியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: