
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாகக் குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பி வைத்தனர். கருணை மனுவை ஆய்வுசெய்த குடியரசுத் தலைவர், தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மாற்றினார். பஸ் எரிப்பு வழக்கில் 10 வருடங்களுக்கு மேலாகச் சிறைதண்டனை அனுபவித்து வருவதால், மூவரையும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைச் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் எடுத்து வருவதாகவும் தெரிகிறது.
இதனிடையே, கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள இந்தக் குற்றவாளிகளைத் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக