
இதையடுத்து நேற்றிரவு அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர் அமைச்சர் மீது
செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவருக்கு முன்
அமைக்கப்பட்டிருந்த மைக் மீது பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து
போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, பொன்.ராதாகிருஷ்ணன்
மீது செருப்பை வீசியவர் பெயர் சாலமோன் என்றும் அவர் இந்திய மக்கள் முண்ணனி
இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பதும் தற்போது
தெரிய வந்துள்ளது. thetimestamil.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக