vikatan ஏர் இந்தியா விமான ஊழியரை சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெயிக்வாட்
இந்திய விமானங்களிலும் பயணம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியன் ஏர்லைன்ஸ்
கூட்டமைப்பு அதிரடியாகத் தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது
மேலும் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் ரவீந்திர கெயிக்வாட்-க்கு
விமானங்களில் பயணம் செய்வதற்கான அனுமதியை மறுத்துள்ளது.
கடந்த வியாக்கிழமையன்று சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெயிக்வாட்
புனேவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது
ரவீந்திர கெயிக்வாட்-க்கு முதல் வகுப்பு இருக்கை தராமல் இரண்டாம் வகுப்பு
இருக்கை தரப்பட்டது. அதனால் கோபமடைந்த ரவீந்திர கெயிக்வாட் விமான ஊழியரை
கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் செருப்பாலும் பலமுறை
அடித்திருக்கிறார். ஆனால் அந்த விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையே
கிடையாது. நடந்த இந்த பிரச்னையில் என் தவறு எதுவும் கிடையாது. எனவே என்னால்
மன்னிப்பு கேட்க முடியாது. அந்த விமான ஊழியரை முதலில் மன்னிப்பு கேட்க
சொலுங்கள் என்று ரவீந்திர கெயிக்வாட் பதிலளித்துள்ளார்.
இதனால் ஊழியரை தாக்கிய ரவீந்திர கெயிக்வாட் இனிமேல் நமது விமானத்தில்
பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என மற்ற ஊழியர்கள் விமான சேவை நிறுவனத்திடம்
கோரிக்கை வைத்தனர். அதன் படி இனி ஏர்இந்தியா விமானங்களில் ரவீந்திர
கெயிக்வாட் பயணம் செய்யகூடாது என ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்தது. இந்த
நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு ஒரு திடீர் அறிக்கை வெளியிட்டது.
அதில் "ரவீந்திர கெயிக்வாட் இனி ஏர்இந்தியா விமானங்களில் மட்டுமல்லாமல்
அனைத்து இந்திய விமானங்களிலும் பயணம் செய்யக்கூடாது" என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஏர்ஆசியா மற்றும் விஸ்தரா ஆகிய விமான சேவை நிறுவனங்களும் 'எங்கள் விமானத்தில் ரவீந்திர கெயிக்வாட் பயணம் செய்ய அனுமதி கிடையாது' என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஏர்ஆசியா மற்றும் விஸ்தரா ஆகிய விமான சேவை நிறுவனங்களும் 'எங்கள் விமானத்தில் ரவீந்திர கெயிக்வாட் பயணம் செய்ய அனுமதி கிடையாது' என அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக