இன்று
சென்னையில் கழிவுநீர் ஓடும் கால்வாய்களாக உள்ள கூவம் ஆறு, அடையாறு ஆறு,
பக்கிங்ஹாம் கால்வாய். இவை ஒரு காலத்தில் நல்ல தண்ணீர் ஓடும் ஆறாகவும்,
அதில் சென்னை மக்கள் படகு போக்குவரத்தையும் மேற்கொண்டார்கள் என்ற தகவல்
இன்றைய தலைமுறையினரால் நம்பமுடியாததாக இருக்கலாம். இப்படி தூய்மையாக இருந்த
சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை மாநகரத்தின்
மக்கள் பெருக்கம், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின்
கழிவுகளால் இன்று துர்நாற்றம் விசும் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன.
கூவம் ஆற்றை தூய்மையாக்க திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் சென்னையின்
மேயராக இருந்தபோது அதை சுத்தமாக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், பெரிய
அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இந்த மூன்று ஆறுகளையும் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அசுத்தமாக்கிய சமூகமும் அதை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான எந்த முயற்சியையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள வீடுகளிலிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளால் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் நீர்நிலைகளில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீர்நிலைகளை மீட்க தமிழக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும். இந்த நீர் நிலைகளை மீட்டெடுக்க நிதி அளிப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இனியாவது, தமிழக அரசு சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆறுகளை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக