‘கங்கை
அமரனுக்குத் தெரிந்து இதெல்லாம் நடக்கிறதா? இல்லை... நடைபெறும் சம்பவங்களை
கங்கை அமரன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறாரா?’ என்று
தெரியவில்லை.
பா.ஜ.க-வின் சார்பாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்ட சமயம், இளையராஜா - எஸ்.பி.பி பிரச்னையும் விஸ்வரூபமெடுத்தது. அப்போது, தேர்தல் தொடர்பாக கொடுத்த பேட்டிகளின்போது இளையராஜா பேராசைப் பிடித்தவர் என்று பேசியிருந்தார். அந்த செய்தி சுவாரஸ்யம் இழந்த சமயம் இப்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.
மகன் பிரேம்ஜியுடன், கங்கை அமரன் வாக்கு சேகரிக்கும் போட்டோவை அவரது மகள் வாசுகி பாஸ்கர் ட்விட்டரில் பதிவு செய்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அந்தப் பதிவில் இளையராஜாவின் வாரிசுகளான யுவன் ஷங்கர் ராஜாவையும், பவதாரிணியையும் டேக் செய்திருந்தார். இந்த பதிவைக் கண்டதும், யுவன் ஷங்கர் ராஜா அதை ரீட்வீட் செய்து நான் இதை ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இதை இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்களும் உடனே ரீ-ட்வீட் செய்யத் தொடங்கியதும் வாசுகி பாஸ்கர் தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். தனது தந்தையை விமர்சித்ததற்காக மட்டுமின்றி, சமீபத்தில் மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரனை ஆதரித்தால் அது பா.ஜ.க-வின் பிரதமர் மோடியை ஆதரிப்பதாக அர்த்தப்படும் என்பதாலும் அதை நீக்கியிருக்கலாம் எனப் பேசப்படுகிறது. minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக