வியாழன், 12 ஜனவரி, 2017

ஜோதிடர்கள் சசிகலாவுக்கு பிரடிக்சன் : முதல்வர் பதவி இப்போ வேண்டாம் !

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்று கொண்டுள்ளார். அதன்பிறகு சசிகலாவின் விருப்பம் இல்லாமலேயே முதல்வர் பதவியில் பன்னீர் செல்வம் அமர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பன்னீர்செல்வம், பதவியில் இருந்து இறங்கி, சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன், கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. அந்த நெருக்கடிகள் தற்போது இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைந்ததும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த சசிகலா, அடுத்த கட்டமாக, முதல்வர் பதவியிலும் உடனடியாகவே அமர்ந்து விட வேண்டும் என கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வந்தார்.
ஜோதிடர்களும் அதற்கேற்ப நாள், நட்சத்திரம் குறித்துக் கொடுத்தனர். ஆனால், போயஸ் தோட்டத்துக்கு வந்திருக்கும் சில ஜோதிடர்கள், தற்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் சரியில்லை என்று கூறியுள்ளனர். ஒருவேளை, பன்னீர்செல்வத்தை தொந்தரவு செய்து, அவரை பதவி இறக்கம் செய்து, அப்பதவியில் அமர்ந்தாலும், சசிகலா தலைமையிலான அரசு, வெகு காலம் நீடிக்காது. கொஞ்சம் பொறுமையாக எதையும் அணுகுவதே நல்லது என கூறியுள்ளனர்.லைவ்டே


கருத்துகள் இல்லை: