வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு தீர்ப்பு வழங்கமுடியாது .. உச்சநீதிமன்றம்! தீர்ப்பு எழுதி முடிக்க அவகாசம் தேவையாம்

டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது. உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் Powered by இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கைய நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவதுசாத்தியம்  இல்லை .tamiloneindia

கருத்துகள் இல்லை: