சனி, 14 ஜனவரி, 2017

மதுரை அவனியாபுரத்தில் நடிகர்கள் மறியல் போராட்டம்: இயக்குநருக்கு அடி, உதை (படங்கள்)


மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதில் கலந்து கொள்ள திரைப்பட இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, யுவன்சங்கர்ராஜா மற்றும் நடிகர் கவுதம் ஆகியோர் வந்தனர்.இவர்கள் வந்தவுடன் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் மறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே நடிகர் கவுதம் திடீரென சாலையில் மறியல் செய்தார். அப்போது அவரை கைது செய்த அவனியாபுரம் போலீசார், மற்ற திரைநட்சத்திரங்களை அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.>கவுதம் மீதும், மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலுசார் தடியடி நடத்தினர். கவுதம் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்ள் கூச்சலிட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.>முகில்<>படங்கள்: அண்ணல்நக்கீரன்

கருத்துகள் இல்லை: