செவ்வாய், 10 ஜனவரி, 2017

தடையை மீறி சபரிமலைக்கு செல்வோம் : திருப்தி தேசாய்


தடையை மீறி சபரிமலைக்கு செல்வோம் என சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் அறிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத்நகரில் உள்ள சனி சிங்னாபூர் கோயிலில் உள்ள கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்கள் அமைப்பினருடன் இணைந்து திருப்தி தேசாய் போராட்டம் நடத்தினார். அதன் பின், கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆண்கள் கோயிலுக்குள்செல்லும்போது பெண்கள் ஏன் செல்லக்கூடாது? என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் பெண்கள் கருவறைக்குள் நுழைய அனுமதி வழங்கியது. மேலும்,
திருப்தி தேசாயின் தொடர் போராட்டத்தால், கடந்த நவம்பர் மாதம், மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது

அதைத் தொடர்ந்து, சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பல பெண்கள் அமைப்புகள் தொடுத்த வழக்கில், கோயிலுக்குள்அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கத் தயார் என கேரள அரசு அறிவித்திருந்தது.
பின்னர், ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோயில் பழக்க வழக்கங்களையும் நடைமுறையையும்மாற்ற முடியாது. எனவே சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்க முடியாது என தான் அறிவித்த அறிவிப்பை தானே மாற்றியது.
அதைத் தொடர்ந்து திருப்தி தேசாய் போராட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 25ஆம் தேதிக்குள் தடையை மீறி சபரிமலை கோயிலுக்குள்நுழைவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,’இப்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தை நடத்திவருகிறேன். யார் தடுத்தாலும் வரும் 25ஆம் தேதிக்குள் சபரிமலை கோயிலுக்குள் செல்வது உறுதி. என்னுடன் மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டஆதரவாளர்களும் இருப்பார்கள். எங்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என தெரிவித்துள்ளார்.
சபரிமலையில், பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியன்று, விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: