வெள்ளி, 13 ஜனவரி, 2017

தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

தமிழ்ச் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் சல்மா. சல்மாவின் இரண்டாவது நாவலான மனாமியங்கள், 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காம் அவருடன் நேர்காணல் நடத்தியது. அப்போது உலக அளவில் தன்னுடைய எழுத்துகளுக்கு அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில், தமிழ் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது என்றார். முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளியான போது, பலவித அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய அரசியல் வாழ்க்கை, உலக எழுத்தாளர்களுடான அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
துவரங்குறிச்சியிலிருந்து புறப்பட்டு உலகம் முழுக்கப் பயணப்படுகிறீர்கள். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“துவரங்குறிச்சி என்பது சின்ன உலகம். அந்த உலகத்தில் இருக்கிற மற்ற பெண்கள், ஆண்களுக்கு அந்த வாழ்க்கை இப்பவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
அது சின்ன உலகம் எனப் புரிய ஆரம்பித்தது இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தவுடந்தான். இலக்கிய புத்தகங்கள் மூலமாக கனவு உலகத்தைப் பற்றிய விரிந்த உண்டானது. இங்கெல்லாம் பயணிக்க வேண்டும் என்கிற கனவை புத்தகங்கள் உருவாக்கின. இவ்வளவு பெரிய மாற்றம் என் வாழ்க்கையில் வரும் என நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு கிராமத்து படிக்காத இளம்பெண்ணுக்கு இருந்த ஏக்கமும் கனவும் நிறைவேறும் என நம்பிக்கைகள் இருந்ததில்லை. குருட்டு நம்பிக்கை அது. என் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னதுண்டு, ‘நான் எழுத்தாளர் ஆவேன்; உலகத்தைச் சுற்றி வருவேன்” என பேச்சுவாக்கில் சொன்னதுண்டு. அது விருப்பமாக இருந்தது. நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது அது நடக்கிறது. என்னுடைய பயணம், வெளி பரந்ததாக மாறியுள்ளது. இது எனக்கே நம்ப முடியாதது. சாதாராண இடத்திலிருந்து இருந்து, அசாதாரண இடத்துக்குப் போவது என்பதை எனக்கு உண்மையிலே நடந்ததா என்பதை எதிர்கொள்ளவே முடியவில்லை.”

எழுத்தின் மூலம் வெளியுலகை அடைய விரும்பி நீங்கள், அதற்கான இன்னொரு வழியாக அரசியலைத் தேர்ந்தெடுத்தீர்களா?

“எழுத்து, இலக்கியத்தின் மேல் மனவேட்கை எனக்கு இருந்தது. இலக்கியத்தின் மேல் ஆர்வம், எழுத வேண்டும் என்கிற தவிப்பு, அதற்கான போராட்டம். கடினமான காலக்கட்டம் அது. ஒரு போராட்டத்தின் மூலமாகத்தான் பெற வேண்டியிருந்தது. கேட்டதும் கிடைக்கக்கூடியது பொருளாக அது இல்லை. இது ஒரு தனிமையான ஒருஅ பயணம். இதை அனுமதிக்க அந்த சமூகத்தில் யாருக்கும் மனதில்லை என்கிறபோது, என்னை நானே வெளியே கொண்டு என்னை நானே முன்னெடுக்க வேண்டும். சண்டையிட வேண்டும். என்னை நிரூபிக்க அடையாளங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்படியாக போராட்டமாக இருந்தது.
ஆனால், அரசியலுக்கு வந்தது போராட்டத்தோடு நடந்தது அல்ல,  குடும்பமே வழிநடத்தி அழைத்து வந்தது. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் குடும்பத்தின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் அதுதான் நிலைமை. அப்படிப்பட்ட சூழலில் அரசியல் மீது விருப்பங்கள் இல்லாதபோதும் குடும்பமே என்னை அரசியலுக்குக் கொண்டுவந்தது.  என்னுடைய தளமாக அரசியலை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. சந்தர்ப்பம்தான் என்னை அழைத்து வந்தது.

ராஜுவ்காந்தி ஆட்சிக் காலத்தில் பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33% அமல்படுத்தப்படுத்தப்பட்டது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில் என் கணவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இருந்தது. கணவர் செல்வாக்கான அரசியல்வாதி. பல வருடங்களாக அரசியல் பணிகளில் இருந்தவர். ஆனால் அவரால் போட்டியிடமுடியவில்லை. இடஒதுக்கீடு காரணத்தால் என்னை நிற்க வைத்தார்.  இப்போது பல இடங்களில் வேற வழியில்லாமல் பெண்கள் அரசியலுக்கு குடும்பத்தாரால் அழைத்து வருவது இப்படித்தான்.
தேர்தலில் போட்டியிட்டுத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தின்பேரில் அரசியலுக்கு வந்தேன். ‘கையெழுத்து போட்டுட்டு போயிடலாம். கூட்டத்துக்கு அழைக்கும் போது வந்தால் போதும்’ என்று சொல்லித்தான் தேர்தலில் நிற்க வைத்தார்கள்.
சுயேட்சையாகத்தான் நின்றேன். பெண்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினராக இருப்பது அதுவும் இஸ்லாமிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கட்சி உறுப்பினராக இருப்பது சாத்தியமில்லாத விஷயம். இன்றைக்கும் அப்படித்தான். சுயேட்சையாக தேர்தலில் நின்றாலும் கணவருடைய செல்வாக்கு பின்புலம் காரணமாக‌ வென்றேன்…” என்றவரிடம் அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்தோம்…
முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளிவந்த பிறகு, உங்களுடைய இலக்கிய செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நேரத்தில் எதனால் அத்தகைய நிலைப்பாடு எடுத்தீர்கள்?

எத்தகைய அச்சுறுத்தல்களை சந்தித்தீர்கள்? இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலின் தொடர்ச்சியாக மானாமியங்கள் நாவலைப் பார்க்கலாமா? இரண்டுமே ஒரே சமூகத்தின் பின்னணியாக வைத்து எழுதப்பட்டவையில்லையா?
;இஸ்லாமிய சமூகம் முன்பைக் காட்டிலும் இறுக்கமான சமூகமாக மாறிவருவதாக ஒரு கருத்து இருக்கிறது. இது பற்றி…
>விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே பெண்கள் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனாமியங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இது குறித்து விமர்சனமாகவோகூட தமிழ்ச் சூழலில் யாரும் பேசவில்லை. இதை ஒருவகையில் புறக்கணிப்பாக கருதலாமா?
பொதுவாக ஆண் எழுத்தாளர்களைப் போல பெண் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக படைப்புகளைத் தருவதில்லையே..?

இன்றைய அரசியல் சூழல் பெண்களை வரவேற்கக்கூடியதாக உள்ளதா?

புகழ்பெற்ற ஆளுமைகளுடனான சந்திப்புகள் உங்களுக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கு எழுத்தாளர் சல்மா அளித்த பதில்களை வீடியோவில் காணலாம்..  thetimestamil.com

கருத்துகள் இல்லை: