வெள்ளி, 13 ஜனவரி, 2017

விவசாயிகள் தற்கொலை:தேசிய அவமானம் - சகாயம் ஐ.ஏ.எஸ்


minnnambalam.com :பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் தஞ்சை மண்ணில் விவசாயிகள் தற்கொலையால் சோகம் நிலவுகிறது. வறட்சியும் நிலம் வெடித்து பாளம் பாளமாக கிடப்பதுமாக பொங்கலை அனைத்து விவசாயிகளாலும் கொண்டாட முடியாத நிலையில்,
தமிழக விவசாயிகளின் மரணம், தேசிய அவமானமாக கருதப்பட வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாளை பொங்கள் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக மக்கள் மற்றும் தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள்.

'தமிழக விவசாயிகளின் மரணம், தேசிய அவமானமாக கருதப்பட வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு அனைவரும் உதவ வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது நம்பிக்கையளித்துள்ளது. அதனால், ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை: