சனி, 14 ஜனவரி, 2017

மாறன் சகோதரர்களின் ஸ்பைஸ் ஜெட் 205 புதிய விமானங்களை 1.5 லட்சம் கோடியில் வாங்குகிறது


விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 1.5 லட்சம் கோடி ரூபாயில் 205 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 35 இந்திய வழித்தடங்கள் மற்றும் 6 சர்வதேச வழித்தடங்களில் தனது விமான சேவையை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு, போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 32 B737 மற்றும் 17 Q400 விமானங்களை வாங்கியது. அவை உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயங்கிவருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கிவரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது தனது சேவைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அதன்பொருட்டு மேலும் 205 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே போயிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 205 புதிய B737 MAX விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய ரக விமானம் 20 சதவிகிதம் வரை எரிபொருள் சிக்கனம் செய்யும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: