வியாழன், 12 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் சசிகலா பரஸ்பரம் கழுத்தறுப்பு ... மக்கள் செய்த பாக்கியம்?

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அந்தளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
சட்டசபை தேர்தலில், பன்னீர்செல்வத்திற்கு, 'சீட்' கிடைக்காது என, தகவல் பரவியது. ஆனால், அவருக்கு சீட் கொடுத்து, அவரை நிதி அமைச்சராக்கி, தனக்கு அடுத்த இடத்தை, ஜெயலலிதா வழங்கினார்.இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதா மறைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை, தற்காலிக முதல்வராக்க முடிவு செய்தனர். ஆனால், மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, மீண்டும் முதல்வராக, பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமை ஏற்கவும், அவரது விசுவாசியாகவும் மாற முன் வந்தார். பொதுச்செயலராக, சசிகலா ஆசைப்பட்ட தும், அந்தப் பதவிக்கு அவர் வர, பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார். முதல்வர் என்பதையும் மறந்து, அவரது காலிலும் விழுந்தார்.

அதன்பிறகும், அவருக்கு சசிகலா உரிய மரியாதை வழங்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சந்திக்க, சசிகலா வந்தபோது, முதல்வர் மற்றும் அமைச்சர் கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட வில்லை. கூட்டம் முடிந்து, சசிகலா புறப்படும் வரை, கால் கடுக்க காத்திருந்தனர்.

இது, பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. தொடர்ந்து, மீனவர் பிரச்னை தொடர்பாக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுத, பதிலுக்கு சசிகலாவும் கடிதம் எழுதினார். மேலும், தன் கடிதம் பத்திரிகை களுக்கு வெளியான பிறகே, பன்னீர்செல்வம் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக, 9ம் தேதி, முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமருக்கு கடிதம் எழுதினார்; நேற்று சசிகலா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தான், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில் மத்திய அமைச்சரிடம் வழங்கினர். இது தொடர்பாக, பத்திரிகையாளரிடம் பேசிய,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஒரு முறை கூட, தமிழக அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. சசிகலா உத்தரவில் வந்ததாக மட்டும் தெரிவித்தார்.

ஒவ்வொரு செயலிலும், தன்னை அவமதிக்கும் வகையில், சசிகலா செயல்படுவது, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

திறப்பு விழா இடமாற்றம் ஏன்?

முதல்வர் பன்னீர்செல்வம், இன்று, 25 துறை களின் சார்பில், வட மாவட்டங்களில் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற் சாலைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சி, சென்னை, எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் நடைபெற உள்ளது. பொதுவாக திறப்பு விழா நிகழ்ச்சி, தலைமை செயலகத் தில், முதல்வர் அறையில் நடைபெறும். ஆனால், அந்த அறையை பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என, சசிகலா உத்தர விட்டதால், விழா எழும்பூருக்கு மாற்றப் பட்டதாக, தகவல் வெளியானது.

அதை, கட்சி நிர்வாகிகள் மறுத்தனர். ஜெயலலிதா மறைந்து, 45 நாட்கள் நிறைவு பெறாததால், அவரது அறையை பயன்படுத்த வில்லை என தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவமனையில் கட்டியுள்ள கட்டடத்தை யும், முதல்வர் திறந்து வைக்கிறார்; அதனால் தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: